நீர்கொழும்பு மீனவர்களுக்கு 60
இலட்சம் ரூபா பெறுமதியான உயிர் காப்பு உபகரணங்கள்
மற்றும் படகுகள் என்பவற்றை கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் ராஜித்த சேனாரத்ன
வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வு நேற்று சனிக்கிழமை
முற்பகல் நீர்கொழும்புபிரதான வீதியில் அமைந்துள்ள ஜுப்லி மண்டபத்தில் இடம்பெற்றது
.
கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தின்
ஏற்பாட்டில் உணவு மற்றும் விவசாய அமைப்பின் வேலைத்திட்டத்தின் கீழ் ( RFLP )
மீனவர்களுக்கு இந்த உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
146 மீனவர்களுக்கு உயிர்காப்பு
உடைகள், உயிர் காப்பு வலயங்கள், முதலுதவி தொகுதிகள், வரை படங்கள் என்பன அங்கு
வழங்கப்பட்டன. இவற்றின் பெறுமதி 40 இலட்சம் ரூபாவாகும்.
அத்துடன் நீர்கொழும்பு மற்றும்
கற்பிட்டி - பத்தளம் குண்டுவ ஆகிய பிரதேசங்களை சேர்ந்த இரண்டு மீனவ சங்கங்களுக்கு
தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான சிறிய படகுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
பிரதி அமைச்சர் சரத்குமார
குணரட்ன, கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சின் அதிகாரிகள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment