கொழும்பு செத் சரண - கரிடாஸ் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் சரவ மதத் தலைவர்கள் பங்குபற்றி
கருத்து தெரிவித்தனர்.
செத்
சரண - கரிடாஸ் நிறுவனத்தின் செயற்றிட்ட முகாமையாளர்
அசான் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்
நீர்கொழும்பு அபேசேகராம விகாரையின்
விகாராதிபதி அட்ட பாகே பியதர்சி தேரர், நீர்கொழும்பு கார்டினல் கூரே நிலையத்தின் அருட் தந்தை சிஸ்வன்டி குரூஸ், இஸ்லாமிய
பிரசாரகரும் சமூக சேவையாளருமான அல்ஹாஜ் அப்துல்லாஹ் ரஹ்மான் ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.
இங்கு
அருட் தந்தை சிஸ்வன்டி குரூஸ் கருத்து தெரிவிக்கையில்,
இன்று சமூகம் தவறான வழியில் சென்று கொண்டிருக்கிறது. சர்வ மதத் தலைவர்கள் ஒன்றணைந்து செயற்படுவதன் மூலமாக
நாடு தவறான வழியில் செல்வதை தடுக்க முடியும்.
மதங்களினூடாக சகிப்புத் தன்மையை மற்றும் ஒற்றுமையை
வளர்ப்பதற்கு ஊடகங்கள் அதிகளவில் பங்களிப்பு
வழங்க வேண்டும். ஊடகங்களுக்கு இது தொடர்பில் அதிக பொறுப்பு உண்டு. சர்வ மதத் தலைவர்கள்
வழங்கும் அறிவுறுத்தல்களை ஆலோசனைகளை வழிகாட்டல்களை ஊடகங்கள் வெளிப்படுத்த வேண்டும்.
அப்படி செய்தால் அதிகாரத்திலுள்ளவர்கள் தவறு செய்யும் போது சர்வ மதத் தலைவர்கள் இதற்கு முன்னர் அது தொடர்பாக வழங்கியுள்ள அறிவுறுத்தல்களையும்
ஆலோசனைகளையும் ஆட்சியாளர்கள் மீறியுள்ளனர் என்பதை பொது மக்கள் அறிந்து கொள்வர்.
அட்ட
பாகே பியதர்சி தேரர் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது,
ஒவ்வொருவரும்
தத்தமது சமயம் கூறும் வழி வகையில் வாழ்வது நல்லது. ஆயினும் சிலர் அவ்வாறு வாழ்வதில்லை.
இத்ன காரணமாக சமூகத்தில் போதைப் பொருள் மற்றும் குற்றச் செயல்;கள் அதிகரித்து காணப்படுகின்றன.
நீர்கொழும்பில சகல இன, மத, மொழிகள் பேசும் மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.
இங்கு இன ரீதியான பிரச்சினைகள ஏற்படுவதில்லை. சகலரும் பொறுப்புடன் நடந்து கொள்கின்றனர்.
இஸ்லாமிய
பிரசாரகரும் சமூக சேவையாளருமான அல்ஹாஜ் அப்துல்லாஹ் ரஹ்மான் அங்கு கருத்து தெரிவ்க்கையில்
கூறியதாவது,
இங்கு
சர்வ மதத் தலைவர்களும் ஊடகவியலாளர்களும் ஒன்று கூடியுள்ளோம். நாட்டில் இரண்டு பெரும்
சக்திகள் ஒன்று சேர்ந்துள்ளன. இந்த இரண்டு சக்திகளும் ஒன்றிணைந்து எதுவும் செய்ய முடியும்.
நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். நல்லதையும் செய்ய முடியும், அதுபோல் தீயதை
செய்யவும் முடியும்.
ஆயினும்
ஊடகங்கள் ஓரளவு மந்த கதியில் செயற்படுவதாக நான் கருதுகிறேன். நாட்டிலும் உலகத்திலும்
ஊழல், மோசடிகள் மற்றும் வன்முறைகள் அதிகரித்து
காணப்படுகின்றன. மனிதனை சரியான பக்கம், ஒற்றுமை,
அன்பு, கருணையின் பக்கம் கொண்டு செல்வதில் நாம் அநேக சந்தர்ப்பத்தில் மந்த கதியில் செயற்படுகிறோம்.
ஒருவர் வன்முறையின் மூலமாக அதிகாரத்திற்கு வருவாராயின் தனது பதவியை, அதிகாரத்தைக் காப்பாற்றிக்
கொள்வதற்காக வன்முறையில் ஈடுபடுவதை காண்கிறோம். சர்வ மதத் தலைவர்களும் ஊடகவியலாளர்களும்
ஒன்று சேர்வோமாயின் இந்த தீய சக்திகள் செயலிழந்துவிடும். அவர்களை சரியான வழயில் கொண்டு
செல்ல முடியும். மக்கள் இன்று அச்சத்துடனயே வாழ்ந்து வருகின்றனர். சிறிய ஒரு எண்ணிக்கையினரே
பிரச்சினையை ஏற்படுத்துகின்றனர். நாங்கள் நல்லதை செய்தால் இறைவன் எங்களுடன் இருப்பான்.
அனைவரும் இதயங்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்றார்.
ஜனாப்
எம்.எஸ்.எஸ் முனீர் சர்வ மதத்தலைவர்களின் உரைகளை தமிழில் தொகுத்து உரையாற்றினார்.
No comments:
Post a Comment