நீர்கொழும்பு கடற்கரைத் தெருவில் அமைந்துள்ள இரண்டு கோயில்களில் உள்ள உண்டியல்கள் உடைக்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு
பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவில்
முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம்
வெள்ளிக்கிழமை (7) நள்ளிரவுக்கு பின்னர் நடந்துள்ளதாக
தெரிய வருகிறது.
இதில் ஒரு கோயிலின் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த
பணம் திருடிச் செல்லப்பட்டுள்ளது. மற்றைய கோயில் உண்டியலின் பூட்டு உடைக்கப்பட்டுள்ள
போதும் இன்னொரு பூட்டு உடைக்கப்பட முடியாமல் போனதால் அந்த கோயிலின் உண்டியலிலிருந்து
பணம் திருடப்படவில்லை.
நீர்கொழும்பு
ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோயில் மற்றும் ஸ்ரீ சித்தி விநாயகர் கோயில் ஆகிய கோயில்களின்
உண்டியல்களே உடைக்கப்பட்டுள்ளன. ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோயிலின் உண்டியலிலிருந்த பணமே
திருடிச் செல்லப்பட்டுள்ளது.
சனிக்கிழமை (8) காலை பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரைண மேற்கொண்டனர்.
இதற்கு
முன்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி கடற்கரைத் தெருவில் அமைந்துள் ஸ்ரீ சிங்கம்மா காளி அம்பாள் ஆலயத்தின் உண்டியல் உடைக்கப்பட்டு
அதிலிருந்த பணம் திருடிச் செல்லப்பட்டது. இந்நிலையிலேயே மேலும் இரண்டு கோயில்களில் திருடர் கைவரிசை இடம்பெற்றுள்ளது.
இரண்டு
வார காலத்தில் மூன்று கோயில்களில் திருடர் கைவரிசை இடம்பெற்றுள்ளமை தொடர்பாக பக்தர்கள்
கவலை தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம்
தொடர்பான மேலதிக விசாரணைகள் நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதய குமார் வுட்டலரின்
ஆலோசனையின் கீழ் நீர்கொழும்பு பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி
ஆனந்த ஹேரத் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment