நீர்கொழும்பு
கொச்சிக்கடையில் இடம்பெற்ற வாகன விபத்தில்
பெண் ஒருவர் ஸ்தலத்திலேயே தலை சிதைந்து பலியாகியுள்ளார்.
இச்சம்பவம்
இன்று செவ்வாய்க்கிழமை (25) பிற்பகல் 12.40 மணியளவில் நீர்கொழும்பு சிலாபம் பிரதான
வீதியில் கொச்சிக்கடை பிரதேசத்தில் முஸ்லிம் பள்ளிவாசல் முன்பாக இடம்பெற்றதாக கொச்சிக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார்
சைக்கிளில் கணவன், மனைவி மற்றும் மூன்று வயதுடைய பிள்ளை ஆகியோர் பயணித்துள்ளனர். சிலாபம்
திசையை நோக்கி வீதியோரமாக சென்று கொண்டிருந்த
மோட்டார் சைக்கிள்
அதே திசையில் சென்று கொண்டிருந்த சீமெந்து கலவை செய்யும் கனரக வாகனத்தில்
திடீரென்று மோதுண்டு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்துக்
கொண்டிருந்த பெண்ணே வீதியில் விழுந்து கனரக வாகனத்தில் மோதுண்டு பலியானவராவார்.
தங்கொட்டுவை
பிரதேசத்தைச் சேர்ந்த சுப்ரமணியம் ரிஸ்மியா சதீர் (33 வயது) என்பவரே விபத்தில் பலியான
பெண்ணாவார். கணவன் மற்றும் பிள்ளை தெய்வாதீனமாக சம்பவத்தில் சிறு சிராய்புக் காயங்களுடன்
உயிர் தப்பியுள்ளனர்.
பெண்ணின் சடலம் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக
வைக்கப்பட்டுள்ளது.
38
வயதுடைய கனரக வாகன சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம்
தொடர்பாக கொச்சிக்கடை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment