கர்தினல்
மல்கம் ரஞ்சித்திற்கு எதிராக அமைச்சர் மங்கள சமரவீர கருத்து தெரிவித்தமையை கண்டித்து
அமைச்சர் மங்கள சமரவுக்கு எதிராக் நேற்று சனிக்கிழமை
(29) மாலை நீரகொழும்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மனித உரிமைகள் தொடர்பாக கார்தினல் மல்கம் ரஞ்சித்
ஆண்டகை தெரிவித்த கருத்துக்கு எதிராக அமைச்சர் மங்கள சமரவீர டிவுட்டரில் பதிந்துள்ள கருத்துக்கு எதிராக ஐக்கிய
தேசிய சுதந்திர முன்னணி கட்சியின் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்;டிருந்தது.
நீர்கொழும்பு
பிரதான மணிக்கூட்டு கோபுரம் அருகில் பேரணியாக வந்தவர்கள் அங்கு கருத்து தெரிவித்தனர்.
ஐக்கிய
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் மைத்திரி குணரத்ன மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள்
இதில் பங்குபற்றினர்.
ஐக்கிய
தேசிய சுதந்திர முன்னணியின்; தலைவர் மைத்திரி குணரத்ன அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்
கூறியதாவது,
அமைச்சர்
மங்கள சமரவீரவின் கருத்து சமய நல்லிணக்கத்திற்கு பாதகமாக அமைந்துள்ளது. இந்த ஆட்சியை அமைப்பதற்காக நீர்கொழும்பு கத்தோலிக்க
மக்கள் அதிக பங்களிப்பு வழங்கியுள்ளனர். ஆட்சிக்கு வர உதவிய மக்களை அரசு எட்டி உதைத்துள்ளது. அமைச்சர் மங்கள சமரவீரவை அமைச்சர் பதவியிலிருந்து
ஜனாதிபதி நீக்க வேண்டும்.
மக்கள் மீது இவர்களுக்கு அக்கறை கிடையாது. ஒரின சேர்க்கையை
ஆதரிக்கும் சட்டங்களை இவர்கள் கொண்டு வர முயற்சி செய்கிறார்கள். உடனடியாக அமைச்சரவையை
கூட்டி மங்கள சமரவீரவை கட்சியிலிருந்தும் அமைச்சு
பதவியிலிருந்தும் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment