Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Friday, September 22, 2017

நிறுவனத்தின் களஞ்சியசாலையிலிருந்து 42 இலட்சம் ரூபா பெறுமதியான செல்லிடத் தொலைபேசிகள் மற்றும் மடிக் கணனிகளை திருடிய பாதுகாப்பு உத்தியோகத்தர், களஞ்சியசாலை பொறுப்பாளர் கைது: பொருட்கள் மீட்பு

சீதுவை லியனகேமுல்ல பிரதேசத்தில் உள்ள பிரபல இலத்திரனியல் மற்றும் பொருள் விற்பனை நிலையம் ஒன்றில் 42 இலட்சம் ரூபா பெறுமதியான செல்லிடத் தொலைபேசிகள் மற்றும் மடிக் கணனிகளை திருடிய இருவரை   நீர்கொழும்பு பிராந்திய விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார்  (21) கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களால் திருடப்பட்ட அதிக பெறுமதியுடைய 43 செல்லிடத் தொலைபேசிகளையும் இரண்டு மடிக் கணனிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

 தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தராக பணிபுரியும் அனுராதபுரத்தைச் சேர்ந்த வாவின்ன சேமகே நுவன் சமீர ஜயவிக்கரம (38 வயது), களஞ்சியசாலை பொறுப்பாளராக பணிபுரியும்  ஜா-எல பிரதேசத்தைச் சேர்ந்த குருகமகே அசங்க ரவின் பெரேரா (33 வயது) ஆகியோரே கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களாவர்.
 சந்தேக நபர்கள் இருவரும் திருட்டு சம்பவம் இடம்பெற்ற சீதுவை லியனகேமுல்ல பிரதேசத்தில் உள்ள பிரதான விற்பனை நிலையமொன்றில் பாதுகாப்பு உத்தியோகத்தராகவும்  களஞ்சியசாலை பொறுப்பாளராகவும் பணியாற்றுபவர்களாவர்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் தெரிவித்ததாவது,
சீதுவை லியனகேமுல்ல பிரதேசத்தில் உள்ள பிரபல இலத்திரனியல் மற்றும் பொருள் விற்பனை நிலையம் ஒன்றில் திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடு கிடைத்தது. நிறுவனத்தின்  கணக்காய்வு பிரிவி;னால் கையிருப்பை சோதனை செய்த போது திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்மை தெரிய வந்துள்ளது.  266 செல்லிடத் தொலைபேசிகள், 9 மடிக் கணனிகள் என்பன திருட்டுப் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டது.
தொலைபேசிகளின் எமி இலக்கங்களை வைத்து விசாரணை நடத்தி களவுபோன செல்லிடத் தொலைபேசிகளை பயன்படுத்துபவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். மேலதிக விசாரணையின்போது அந்த செல்லிடத் தொலைபேசிகள் பல்வேறு பிரதேசங்களிலும் விற்பனை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.


குறித்த நிறுவனத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தராகவும்  களஞ்சியசாலை பொறுப்பாளராகவும் பணியாற்றுபவர்கள் தொலைபேசிகளை திருடி விற்பனை செய்தமை தெரிய வந்தது. பின்னர் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
43 செல்லிடத் தொலைபேசிகளும் 2 மடிக் கணனிகளும்  கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த தொலைபேசிகள் நவீன ரக தொலைபேசிகளாகும். கைப்பற்றப்பட்ட பொருட்களின் பெறுமதி 41 இலட்சத்து 89 ஆயிரத்து 28 ரூபா ஆகும். சந்தேக நபர்களை இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்
  


நீர்கொழும்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுர சேனாரத்ன த சில்வாவின் ஆலோசனையின் பேரில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் லலித் ரோஹனவின் வழிகாட்டலில் பிராந்திய விசேட  குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சந்திமால் விஜேசிங்க  தலைமையிலான குழுவினர் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர.;





No comments:

Post a Comment