Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Wednesday, November 22, 2017

நீர்கொழும்பு அல்-ஹிலால் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் பொதுக்கூட்டமும் புதிய அங்கத்தவர்கள் தெரிவும்


நீர்கொழும்பு அல்-ஹிலால் மத்திய கல்லூரியின்  பழைய மாணவர்களின் வருடாந்த பொதுக்கூட்டம்  மற்றும் புதிய அங்கத்தவர்கள் தெரிவு  கல்லூரி மண்டபத்தில் அதிபர் எம். எம். எம். இர்ஷாட் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை  (19-11-2017) இடம்பெற்றது.
 பாடசாலையின் கடந்த வருடத்தில் முன்னெடுக்கப்பட்ட கல்வி அபிவிருத்திப் பணிகள் பற்றியும் எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டியுள்ள முக்கிய பணிகள் சம்பந்தமாகவும் அங்கு ஆராயப்பட்டன.  இதேவேளை புதிய அங்கத்தவர் தெரிவு நிகழ்வும் இங்கு இடம்பெற்றது.
  பழைய மாணவர் சங்கத்தின்  புதிய நிருவாக அங்கத்தவர்கள் வருமாறு

தலைவர் எம் எம் எம் இர்ஷாட் (அதிபர்) , செயலாளர் எம் எச் ஹுஷாம் , பொருளாளர் எம் எம் எம் றிப்கான் , பிரதித் தலைவர் எம். பி. எம். றஷ்மி (கணக்காய்வாளர்)  , உப  பொருளாளர்கள் ஐ. ஆர். எம். ஆதிப் மற்றும் எம். கே. எம். அபான், உப செயலாளர்கள் ஏ. ஐ. எம். தாரிக் மற்றும் எம். எச். எம். ஹிப்லான்


No comments:

Post a Comment