Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Friday, December 8, 2017

ஹிலாலியன்ஸ் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் நீர்கொழும்பில் 500 மாணவர்களுக்கு புத்தகப் பைகள் மற்றும் கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்வு

நீர்கொழும்பு வலயத்தில் உள்ள தமிழ், முஸ்லிம்,  சிங்களப் பாடசாலைகளைச் சேர்ந்த  வசதி குறைந்த 500 மாணவர்களுக்கு புத்தகப் பைகள் மற்றும் கற்றல் உபகரணங்களை  வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை  (7-12-2017) மாலை நீர்கொழும்பு அல் - ஹிலால் மத்திய கல்லூரியில் நடைபெற்றது.
சம் சம் பவுன்டேசன் (Zam  zam foundation)  நீர்கொழும்பு ஹிலாலியன்ஸ் நலன்புரி அமைப்புடன் (Hilalians charity org.) இணைந்து  School with a Smile Project    வேலைத்திட்டத்தின் கீழ்  இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

அல் - ஹிலால் மத்திய கல்லூரி, அல்- பலாஹ் மகா வித்தியாலயம், தளுபத்தை மகா வித்தியாலயம், விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி, வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயம், துட்டுகெமுனு வித்தியாலயம்,  நிமல மரியா மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த  500 மாணவர்களுக்கு தலா மூவாயிரம் ரூபா பெறுமதியான புத்தகப் பைகள், கற்றல் உபகரணங்கள் மற்றும் பாதணிகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள்  இந்நிகழ்வில் அன்பளிப்பு செய்யப்பட்டன.











இந்நிகழ்வில் சம் சம் பவுன்டேசனின் தலைவர் அஸ்ஷேய்க் யூசுப் முப்தி மற்றும் அதன் முக்கியஸ்த்தர்கள் , நீர்கொழும்பு ஹிலாலியன்ஸ் நலன்புரி; அமைப்பின் முக்கியஸ்த்தர்கள்,  சர்வ மதத் தலைவர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பிரதேச முக்கியஸ்த்தர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையானோர் பங்குபற்றினர்.

நிகழ்வில்; சம் சம் பவுன்டேசனின் தலைவர் யூசுப் முப்தி , அல்ஹிலால் மத்திய கல்லூரி அதிபர்  எம்.எம். இர்சாத் , சர்வ மதத் தலைவர்கள் உட்பட முக்கியஸ்த்தர்கள் பலர் உரையாற்றியதுடன் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.















No comments:

Post a Comment