Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Tuesday, February 6, 2018

ஏப்ரல் மாதம் அனைத்து பாடசாலைகளிலும் உயர்தரம் படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக டெப் வழங்குவதற்கும் பாடசாலைகளுக்கு இலவச வைபை வழங்குவதற்கும் தீர்மானித்துள்ளோம். பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு

நாங்கள் 2017ம் ஆண்டு நாடு முழுவதும் இலவச வைபை  வழங்குவதாக வாக்குறுதி அளித்திருந்தோம் இருப்பினும் நாட்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் இத்திட்டம் பிற்போடப்பட்டது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் அனைத்து பாடசாலைகளிலும் உயர்தரம் படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக  'டெப்' வழங்குவதற்கும் பாடசாலைகளுக்கு இலவச வைபை (WIFI) வழங்குவதற்கும் அடுத்த கட்டமாக நாட்டில் பல இடங்களில் இலவச வைபை வழங்குவதற்கும்; நாங்கள் தீர்மானித்துள்ளோம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.


எதிர்வரும் 10ம் திகதி நடைபெற உள்ள  உள்ளுராட்சி மன்ற  தேர்தலை முன்னிட்டு ஐக்கிய தேசிய கட்சி ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரச்சார கூட்டம் நேற்றைய  தினம் (05) நீர்கொழும்பு நகர மத்தியில் அமைந்துள்ள லெய்டன் மைதானத்தில் நடைபெற்றபோதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க  மேற்சொன்னவாறு தெரிவித்தார்

இக் கூட்டத்தில் காணி அமைச்சர் ஜோன் அமரதுங்க , பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜெயவர்த்தன, நீர்கொழும்பு தொகுதி அமைப்பாளர்  ரொய்ஸ் விஜித பெர்னான்டோ, மேல் மாகாண சபை உறுப்பினர்  ஷாபி ரஹீம், ஐக்கிய தேசிய கட்சியின் கட்டான தொகுதி அமைப்பாளர் ரோஸ் பெர்னாண்டோ , நீர்கொழும்பு மாநகரசபைக்கு ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 அங்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க  தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,


2015ம் ஆண்டு நீர்கொழும்பு மக்களின் ஒத்துழைப்புடன் நாம் ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்து அரசாங்கத்தை அமைத்தோம் அதை நாம் மறக்கவில்லை இப்போது நகர சபையை எங்களுக்கு தாருங்கள் எங்கள் கடமையை முழுமையாக நிறைவேற்றி தருகின்றோம்.
\



நாங்கள் 2017ம் ஆண்டு நாடு முழுவதும் இலவச வைபை  வழங்குவதாக வாக்குறுதி அளித்திருந்தோம் இருப்பினும் நாட்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் இத்திட்டம் பிற்போடப்பட்டது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் அனைத்து பாடசாலைகளிலும் உயர்தரம் படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக  டெப் வழங்குவதற்கும் பாடசாலைகளுக்கு இலவச வைபை வழங்குவதற்கும் அடுத்த கட்டமாக நாட்டில் பல இடங்களில் இலவச வைபை வழங்குவதற்கும்; நாங்கள் தீர்மானித்துள்ளோம்.
இந்த நாட்டிலுள்ள அணைத்து இளைஞர், யுவதிகளையும் புதிய உலகம் ஒன்றுக்குள் அழைத்து  செல்வதற்கும் அவர்களுக்கு தகவல் தொழினுட்பத்தை கற்றுகொடுப்பதற்கும் நாங்கள் முயற்சி எடுக்கின்றோம்.
நாங்கள் இன்னும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்;ஷ அவர்கள் பெற்ற கடன்களையே கட்டி வருகின்றோம் இந்த வருடத்திலும் அடுத்த வருடத்திலும் அந்த கடன்கள் அனைத்தையும் கட்டி முடிக்க முடியும்.
நாங்கள் இப்போது அபிவிருத்தி செயற்திட்டங்களை ஆரம்பித்து விட்டோம் அதில் முதன்மையானது அதிவேக நெடுஞ்சாலைகள் திட்டமாகும்.





இன்னும் சிறிது காலத்தில் கண்டியில் இருந்து அம்பாந்தோட்டைக்கு 4 மணித்தியாலங்களில் செல்ல முடியும். அம்பாந்தோட்டை துறைமுகம் மூட வேண்டிய நிர்பந்தத்தில் நாம் இருந்தோம.; இப்போது சீனா உடன் கதைத்து அதனை மாற்ற திட்டமிட்டு உள்ளோம். இன்று மிகபெரிய  கப்பல்; நிறுவனம் அம்பாந்தோட்டைக்கு வருகின்றது
கொழும்பிற்கு அடுத்தபடியாக நாம் அபிவிருத்தி செய்வதற்கு நீர்கொழும்பு நகரத்தையே தேர்ந்தெடுத்து உள்ளோம். நீர்கொழும்பிலிருந்து கல்பிட்டி வரையில் சுற்றுலா துறையின் கீழ் அபிவிருத்தி செய்ய உள்ளோம். அதுமட்டுமல்லாமல் இன்னும் அதிகமான அபிவிருத்தி திட்டங்கள் நீர்கொழும்பில்  இடம்பெற உள்ளன.
நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் தடைப்பட்டு இருந்த ஜிஎஸ்பி பிளஸ்ஸை கொண்டு வந்தோம் ஜிஎஸ்பி பிளஸ் வந்ததன் பின்னர் மீனவர்களிக்கான வருமானம் அதிகரித்துள்ளது நீர்கொழும்பில் இருந்து அதிகமான மீன்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயம் அபிவிருத்தி அடையும்போது நீர்கொழும்பும்  அபிவிருத்தியடையும். மீன் ஏற்றுமதி அபிவிருத்தி  அடையும்போது நீர்கொழும்பு அபிவிருத்தியடையும். நாட்டின் வளங்களை அபிவிருத்தி செய்துதான் நீர்கொழும்பை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று நான் உங்களிடம் கூற வந்தேன்.
இவை அனைத்தும் இடம்பெற வேண்டுமென்றால் மீண்டும் நீர்கொழும்பு மாநகர சபையை ஐக்கிய தேசிய கட்சியிடம் ஒப்டைக்க்மாறு உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். முன்பு இந்த நகர சபையை திருடர்களே ஆட்சி செய்தார்கள.; அவர்கள் செய்த அபிவிருத்தி என்ன?
எனவே எதிர்வரும் 10ம் திகதி  ஐக்கிய தேசிய கட்சி யானை சின்னத்திற்கு வாக்களித்து  ரொய்ஸ் விஜித பெர்னான்டோ அவர்களையும் ஏனைய ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர்களையும்  வெற்றியடைய செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.







No comments:

Post a Comment