Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Sunday, April 29, 2018

நீர்கொழும்பு நகரில் வெசாக் வலயம் அமைக்கப்பட்டு கொண்டாடப்படும் வெசாக் தினம் (PHOTOS)


நீர்கொழும்பு நகரில்  வெசாக் தினம் இம்முறை மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நகரின் பல இடங்களிலும் தானசாலைகள், தோரணங்கள் மற்றும் வெசாக் கூடுகள்  அமைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் நகரின் பிரதான விகாரைகளான அங்குருகாராமமுல்ல  போதிராஜ ராமய, அபயசேகராராமய அமைந்துள்ள பிரதேசம் வெசாக் வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
 இந்த இரண்டு விகாரைகளின் ஏற்பாட்டுடன் வொசாக்கூடு போட்டிகள் நடத்தப்படுவதுடன்  தோரணம் மற்றும் தான சாலைகள்; அமைக்கப்பட்டுள்ளன இதற்கு புத்தசாசன அமைச்சு, நீர்கொழும்பு மாநகர சபை ஆகியன அனுசரணை வழங்குகின்றன. 

அங்குருகாராமமுல்ல  போதிராஜ ராமயவில் அமைக்கப்பட்டுள்ள தோரணத்தை நீர்கொழும்பு மேயர் தயான் லான்ஸா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்ஸா ஆகியோர் நேற்று மாலை திறந்து வைத்தனர்.


நீர்கொழும்பு பொலிஸார் அங்குருகாராமமுல்ல  போதிராஜ ராமயவில் கோப்பி மற்றும் பிஸ்கட் தானசாலையை நேற்று நடத்தினர்.
இதேவேளை நீர்கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசங்களில் 95 தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக  நீர்கொழும்பு பொது சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.















No comments:

Post a Comment