60 இலட்சம் ரூபா செலவில் நீர்கொழும்பு வலய கல்வி அபிவிருத்திக்கு உதவும் விஷேட நிகழ்வு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் இரண்டாவது பதவிக்காலம் ஆரம்பமாவதை கொண்டாடும் வகையில் நீர்கொழும்பு வலய கல்வி அபிவிருத்திக்கு உதவுதல் மற்றும் தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் திறமை காட்டிய மாணவர்களை கௌரவித்தல் என்ற தொனிப்பொருளில் விஷேட நிகழ்வு 26-11-2010 அன்று நீர்கொழும்பு நிவ்ஸ்டட் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.
பாடசாலை அதிபர்கள், பிரதி அதிபர்கள்,மாணவர்கள் மத்தியில் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். அத்துடன் மாகாண,வலய கல்விப் பணிப்பாளர்கள் , மேல் மாகாண அமைச்சர் நிமல் லான்ஸா.பிரதி அமைச்சர் சரத்குமார குணரட்ன,மேல் மாகாண உறுப்பினர் லலித் வணிகரத்ன, ஆனந்த ஹரிச்சந்திர, நீர்கொழும்பு மேயர் மதத் தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந் நிகழ்வில் தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் திறமை காட்டிய மாணவர்களுக்கு மடிக் கணனிகள்.பரிசில்கள் வழங்கப்பட்டன.அத்துடன் பாடசாலைகளுக்கு உபகரணங்கள் நிதி என்பனவும் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆற்றிய உரை
No comments:
Post a Comment