Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Saturday, November 20, 2010


நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் இன்னுமொரு சிசு மரணம்




நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் இன்னுமொரு சிசு மரணம் இடம்பெற்றுள்ளது. பிறந்து 4 நாட்களின் பின்னர் குழந்தையொன்று இறந்துள்ளது. நீர்கொழும்பு, தலாதுவ, சாந்தசேவியர் வீதியை சேர்ந்த மேரிரோஸ் பிரியங்கா (23 வயது) என்ற தாயின் குழந்தையே வைத்தியர்களின் அசிரத்தையினால் இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

4 கிலோ 400 கிராம் நிறை கொண்ட இக் குழந்தையை சிசேரியன் சத்திர சிகிச்சை மூலமாவே பிரசவம் செய்திருக்க வேண்டும்.ஆயினும் வைத்தியர்கள் சிலர் இயற்கையாக பிரசவம் செய்ய எடுத்த முடிவினால் குழந்தை மரணத்தை தழுவ நேர்ந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.

குழந்தை பிறக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது குழந்தையும் தாயும் நலமாக இருப்பதாகவும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி குழந்தை பிறக்கும் எனவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.அத் தாயும் அன்றைய தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் 5 தினங்கள் கடந்தே குழந்தை பிறந்துள்ளது.

அதன்படி 13 ஆம் திகதி இயற்கையான முறையில் பிரசவம் இடம் பெற்ற போது குழந்தையின் தலைப் பகுதி தாயின் யோனி வழியாக வெளி வந்த போதும் கழுத்து முதல் கால் வரையுள்ள பகுதி 20 நிமிடங்களாக வெளியே வராமல் இருந்துள்ளது. பின்னர் வைத்தியசாலையின் விஷேட வைத்திய நிபுணர் வரவழைக்கப்பட்டு உபகரணங்களின் உதவியுடன் குழந்தை வெளியே எடுக்கப்பட்டபோது குழந்தையின் வலது கை எலும்பு உடைந்துள்ளது.

பின்னர் குழந்தை baby room இல் வைக்கப்பட்டு 17-11-2010 அன்று இரவு 7.30 மணியளவில் இறந்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கையில் சிசுவின் கழுத்துப் பகுதியும் வலது கை எலும்பும் உடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் இதற்கு முன்னர் இதுபோன்று பல சிசு மரணங்கள் இடம்பெற்றுள்மை குறிப்பிடத்தக்கது.

19-11-2010 அன்று குழந்தையின் இறுதிச் சடங்கு தலாதுவ,கடோல்கலே பிரதேசத்தில் பலபேரின் கண்ணீருக்கு மத்தியில் இடம் பெற்றது.இக் குழந்தை அத்தாயின் முதலாவது பிரசவமாகும்.

No comments:

Post a Comment