Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Thursday, March 29, 2012

நீர்கொழும்பு கோட்ட தமிழ் மொழிப்பாடசாலைகளில் மாணவிகள் இருவர் 9 பாடங்களில் ஏ சித்தி


வெளியிடப்பட்டுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான பெறுபேறுகளின்படி நீர்கொழும்பு கல்வி வலயத்தில் உள்ள தமிழ் மொழிப் பரீட்சைகளைச் சேர்ந்த மாணவிகள் இருவர் ஒன்பது
பாடசாலைகளிலும் அதி விசேட (ஏ சித்தி)சித்தி பெற்றுள்ளனர்.

நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்தியக் கல்லூரியை சேர்ந்த செல்வி சஞ்சு குலேந்திரன் என்ற மாணவியும் , அல்ஹிலால் மத்திய கல்லூரியை சேர்ந்த செல்வி ஏ.எப்.சாரா என்ற மாணவியுமே ஒன்பது பாடங்களிலும் அதி விசேட சித்தியை பெற்று பாடசாலைக்கு பெருமை தேடித்தந்துள்ளவர்களாவர்.

இதேவேளை ,விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியை சேர்ந்த மாணவிகள் இருவர் 8 பாடங்களில்  அதி விசேட சித்தியை (ஏ சித்தி) பெற்றுள்ளனர். செல்வி ஞான தர்சனா கணோசலிங்கம் , செல்வி சிந்துஜா கனகநாயகம் ஆகிய மாணவிகளே அவர்களாவர் .

அல்ஹிலால் மத்தியக் கல்லூரியில் இரண்டு மாணவிகள் ஏழு பாடங்களில்  அதி விசேட தரம் பெற்று சித்தியடைந்;துள்ளனர்.
அல்பலாஹ் மகா வித்தியாலத்தை சேர்ந்த செல்வி எம்.எச்.எப். பர்வீன் என்ற மாணவி ஆறு பாடங்களில் அதி விசேட சித்திகளை பெற்று இப்பாடசாலைகளில் சிறந்த பெறுபேற்;றை பெற்றுள்ளனர்.


No comments:

Post a Comment