நீர்கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய தேசிய கட்சியின் குழுத்தலைவராக ஆராச்சிலாகே தொன் கெலிஸ்டர் ஜயகொடியை நியமித்தமை நீர்கொழும்பு மாநகர சபையின் ஐ.தே..க உறுப்பினர் சஜித்மோகன் ஆட்சேபம் தெரிவித்ததோடு ,குழுத்தலைவராக தன்னை நியமிக்குமாறு ஐ.தே.க தலைவர் ரணில் விக்கரமசிங்கவுக்கு கடிதம் மூலமாக அறிவித்துள்ளார்.
நீர்கொழும்பு மாநகர சபையின் ஐ.தே.க.குழுத்தலைவராக செயற்பட்ட ரொயிஸ் விஜித பெர்னாண்டோ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதன் காரணமாக மாநகர சபையின் மாநகர சபையின் ஐ.தே.க. வின் குழுத்தலைவராக கட்சியின் சார்பில் விருப்பு வாக்குகள் பட்டியலில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ள கெலிஸ்டர் ஜயகொடியை (3845 விருப்பு வாக்குகள்) தற்காலிகமாக நியமித்துள்ளதாக 13.3.2012 திகதியிட்டு ஐ.தே.க . பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவினால் நீர்கொழும்பு மாநகர சபையின் செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் , அந்த தீர்மானத்தை உடனடியாக ரத்து செய்து தன்னை நியமிக்குமாறு மாநகர சபை உறுப்பினர் சஜித் மோகன் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது .
அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கடந்த மாநகரசபை தேர்தலில் 5796 விருப்பு வாக்குகளை பெற்று விருப்பு வாக்குகளின் அடிப்படையில் கட்சியின் சார்பில் இரண்டாவது இடத்தை நான் பெற்றேன். அந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெற்றிருந்தால் பிரதி மேயராக நான் தெரிவாகியிருப்பேன் . ஆயினும் ஐ.தே. கட்சியின் கொள்கையின்; அடிப்படையிலோ அல்லது தனிநபர் விரோதத்தின் அடிப்படையிலோ, தமிழரான இந்து மதத்தை சேர்ந்த எனக்கு பிரதி மேயர் பதவி கிடைத்திருக்காது என இப்போது தெளிவாக புரிகிறது. எமது குழுத்தலைவராக இருந்த எதிர்கட்சி தலைவர் ரொயிஸ் விஜித பெர்னாந்து விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தாலும், நீதிமன்றத்தால் குற்றவாளியாக தீர்மானிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டவரல்ல. அவர் கட்சிக்காக கடுமைய உழைத்தவர். அவசர அவசரமாக குழுத் தலைவர் ஒருவரை நியமிக்கு முன்னர் ரொயிஸ் விஜித பெர்னாந்துவிடமும், கட்சியின் மாநகர சபை உறுப்பினர்களிடமும் கருத்துகள் பெறப்பட்டிருக்க வேண்டும்.
அப்படி செயற்படாமல் குழுத்தலைவராக இன்னொருவரை நியமிக்க நடவடிக்கை கடுமையாக எதிர்க்கிறேன் . எமது குழுவிலுள்ள உறுப்பினர்களும் இது தொடர்பாக விரக்தியுற்றுள்ளனர். புதிய ஒருவரை நியமித்தமை விருப்பு வாக்குகளின் அடிப்படையிலா , இன ரீதியான அடிப்படையிலா? அல்லது சிரேஸ்டத்துவத்தின் அடிப்படையிலா ? என்பது கட்சியின் பொது செயலாளரினால் மாநகர சபையின் செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை. ஆயினும் அது தொடர்பாக விசாரிக்கவோ , கோரிக்கை விடுக்கNவுh எனக்கு உரிமை இருப்பதைஆதாரங்களுடன் தெரிவிப்பதற்கு நான் விருப்பம் கொண்டுள்ளேன் என்று மாநகர சபை உறுப்பினர் சஜித் மோகன் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது .
இக்கடிதத்தின் பிரதிகள் கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச ,கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக ,பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் யஜலத் ஜயவர்தன, ஜோசப் மைக்கல் பெரேரா , பிhதி தலைவர் கரு ஜயச10ரிய, மேல் மாகாண சபை உறுப்பினர் ஸ்ரீநாத் பெரேரா,மாநகர சபையின் எதிர்கட்சி தலைவர் ரொயிஸ் விஜித பெர்னாந்து ,மற்றும் மாநகர சபை உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment