Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Thursday, April 5, 2012

டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் விசேட பிரிவிற்கான அடிக்கல் நாட்டப்பட்டது


நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்கும் விசேட பிரிவிற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது .


இந்த டெங்கு காய்ச்சல் விசேட சிகிச்சைபிரிவு சுகாதார அமைச்சின்
13 இலட்சம் ரூபா உத்தேச செலவில் அமைக்கப்படவுள்ளது. ஒரே சமயத்தில் 20 நோயாளிகள் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கான வசதிகள் கொண்டதாக இந்த பிரிவு அமையவுள்ளது

அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதி அமைச்சர் சரத்குமார குணரட்ன, பாராளுமன்ற உறுப்பினர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே, நீர்கொழும்பு மேயர் அன்ரனி ஜயவீர , முன்னாள் மேயர் ஹேர்மன்  குரேரா, நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி , சுகாதார அமைச்சின் அதிகாரிகள் , மதத் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




No comments:

Post a Comment