Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Monday, May 7, 2012

நீர்கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கபில சுலோச்சனவுக்கு மரண அச்சுறுத்தல்


நீர்கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் கபில நந்தன சுலோச்சவுக்கு  தொலைபேசி மூலம் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது இதனை அடுத்து அவரது வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக நீர்கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கபில நந்தன சுலோச்சன கூறியதாவது.


 நேற்றிரவு 7.07 மணியளவில் தொலைபேசி மூலம் (செல்லிட) தொடர்பு கொண்ட நபர் ஒருவர் தனது பெயர் சஜித் எனவும் , என்னை கொலை செய்வதற்கு தனக்கு கொந்தராத்து ஒன்று தரப்பட்டுள்ளதாகவும் கூறியதுடன், என்னை எனது வீட்டார் முன்னிலையில் கொலை செய்வதற்கு முன்னர் வீதிக்கு வருமாறு கூறி அச்சுறுத்தல் விடுத்தார்.

இது தொடர்பாக நான் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நீர்கொழும்பு தொகுதி அமைப்பாளரும் பிரதி அமைச்சருமான சரத்குமார குணவர்தனவிடம் தெரிவித்தேன். அதனை தொடர்ந்து கொலை அச்சுறுத்தல் தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

 அத்துடன் பிரதி பெலிஸ் மா அதிபர் மற்றும் அமைச்சர் பசில ராஜபக்ஷ ஆகியோருக்கும் இவ்விடயம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. நான் முப்பது வருட காலமாக அரசியலில் ஈடுபட்டுள்ளேன் , 5 தடவைகள் மாநகர சபை தேர்தலில் போட்டியிட்டு , 4 தடவைகள் மாநகர  சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளேன் .

நான் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவன் அல்ல சிறிய வருமானத்திலேயே வாழ்க்கை நடத்துகின்றேன் மோட்டார் சைக்கிளே எனது வாகனமாக உள்ளது.

2011 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டதன் பின்னரே எனக்கு தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகிறது இந்த வருடம் ஜனவரி மாதம் இது போன்று தொலைபேசி அச்சுறுத்தல்  விடுக்கப்பட்டது.
பொலிஸ் நிலையத்தில் முறையிட்டேன் பாதுகாப்பு வழங்கப்படவி;ல்லை. ஜனவரி 31 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களினால் கத்திக்குதட்துக்கு இலக்காகி தெய்வாதீனமாக உயிர்தப்பினேன். அன்று என் கழுத்தை இனந்தெரியாத நபர்கள் கூரிய ஆயுதத்தினால்  வெட்ட முற்பட்ட போது நான் கைகளினால் தடுத்ததனால் கைளில் வெட்டுக் காயங்களோடு தப்பித்தேன். ஒரு மாத்திற்கு மேலாக சிகிச்சை பெற்றேன்.

 இம்முறையும் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதால் எனது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனது குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர் நான் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்க வேண்டி ஏற்பட்டுள்ளது . சென்ற முறை என்னை தாக்கியவர்கள் இதுவரை இனங்காணப்படவோ கைது செய்யப்படவோ இல்லை என்றார்.

No comments:

Post a Comment