மனித நுகர்வுக்கு பொருத்தமில்லாத கழிவுகள் சேர்ந்த உணவுப்பொருட்களைவ
விற்பனை செய்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட உணவக உரிமையாளருக்கு நீர்கொழும்பு
பிரதான மஜிஸ்ரேட் ஏ.என்.எம்.பி அமரசிங்க 7 ஆயிரத்து 500 ரூபா அபராதம் விதித்தார்.
நீர்கொழும்பு பெரியமுல்லை
பிரதேசத்தில் இரவு நேர உணவகம் ஒன்றை நடத்தி வந்த உரிமையாளர் ஒருவருக்கே மேற்படி
அபராத தொகை விதிக்கப்பட்டது.
நீர்கொழும்பு மாநகர சபையின் பொது சுகாதாரப பிரிவினர் நீர்கொழும்பு -
சிலாபம் பிரதான வீதியில் பெரியமுல்லை பிரதேசத்தில் இயங்கி வரும் ஐந்து உணவகங்கள்
மீது மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது அபராதம் விதிக்கப்பட்டுள்ள
உணவகத்தில் தயாரிக்கப்பட்ட கொத்து ரொட்டியில் கழிவுகள் உள்ளமை
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காலாவதியான மற்றும் நுகர்வுக்கு பொருத்தமில்லாத உணவுப்பொருட்கள்
விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் கடை உரிமையாளர் நீதிமன்றில் ஆஜர்
செய்யப்பட்டபோதே நீதவான் மேற்படி அபராதத் தொகையை விதித்தார்.
வெளிநாடு செல்வதற்காக தூர
இடங்களிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருவோர்
பெரியமுல்லை பிரதேசத்தில் உள்ள சில இரவு நேர உணவகங்களில் உணவு உட்கொண்ட பின்னர்
வயிற்று கோளாறு ஏற்பட்டமையினால் தமது வெளிநாட்டு பயணத்தை பிற்போடவேண்டி
ஏற்பட்டுள்ள சமபவங்களும் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இந்த திடீர் சோதனை நடவடிக்கை பொது சுகாதார பரிசோதகர் ஈ.ஏ. மோமரத்ன
தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment