நீர்கொழும்பு குடாப்பாடு பிரதேசத்தில்
குடாப்பாடு தேவாலயத்திற்கு பின்னால் உள்ள கடலோரப் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றை
சுற்றி அமைக்கப்பட்ட சுற்றுமதிலை பிரதேசவாசிகள் உடைத்து நாசமாக்கியதுடன்
அப்பகுதியில் இருந்த பல தென்னை மரங்களையும் வெட்டி வீழ்த்தியுள்ளனர்.
இச்சம்பவம் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.200 இற்கும் மேற்பட்டவர்கள் இதன் போது சமூகமளித்திருந்ததாக
தெரிவிக்கப்படுகிறது.
கடலோர பாதுகாப்பு திணைக்களத்திற்கு
சொந்தமான கடலோரப் பகுதியில் கடலிலிருந்து 50 மீற்றர் து{ரத்தில் வீடொன்றை சுற்றி அமைக்கப்பட்டிருந்த
சுற்றுமதிலும் அப்பகுதியில் இருந்த 10 இற்கும் மேற்பட்ட தென்னை மரங்களுமே வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளன.
கடலோரப் பகுதியில் சட்டவிரோத செயல்களை
மேற்கொள்வதற்கு இடமளிக்கப்போவதில்லை எனவும். தமது பிள்ளைகள் விளையாடுவதற்கு
வசதியாகவே மரங்களை வெட்டியதாகவும். சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட சுற்றுமதில்
காரணமாக பிரதேச மக்கள் கடல் பகுதிக்கு செல்வதற்கு இடைஞ்சல் ஏற்பட்டதன் காரணமாக
சுற்றுமதில் உடைக்கப்பட்டதாகவும் பிரதேச மக்கள்
தெரிவித்தனர்.
இதேவேளை , மரங்கள்
வெட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரமொன்றை கைப்பற்றியுள்ளதாகவும், சம்பவத்
தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் நீர்கொழும்பு பொலிஸார்
தெரிவித்தனர்.
No comments:
Post a Comment