சீதுவை
பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதங்களினால் வெட்டியும் குத்தியும் கொலை
செய்யப்பட்டுள்ளதாக சீதுவை பொலிஸார் தெரிவித்தனர்.
இளைஞரின்
சடலம் இன்று காலை 9 மணியளயவில் சீதுவை – தம்பதுரை
பிரதேசத்தில் உள்ள இளைஞரின் வீட்டு அறையொன்றில் இருந்து பொலிஸாரால்
மீட்கப்பட்டுள்ளது.
சுங்கீத்
சனத் புஷ்பகுமார என்ற 29 வயதுடைய நபரே இனந் தெரியாதவர்களினால் கொலை செய்யப்பட்டுள்ளவராவார்.
இவரது
முகத்தில் கூரிய ஆயுதங்களினால் மேற்கொள்ளப்பட்ட 5 காயங்கள் இருப்பது விசாரணகளின் போது தெரிய வந்தது.
இதேவேளை,
இன்று முற்பகல் சம்பவ இடத்துக்கு சென்ற நீர்கோழும்பு மேலதிக நீதவான் திருமதி
ராஜிந்ரா ஜயசூரிய விசாரணை நடத்தியதுடன் பிரேத பரிசோதனை செய்து அறிக்கை
சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment