நீர்கொழும்பு
குடாப்பாடு பிரதேசத்தில் குடாப்பாடு தேவாலயத்திற்கு பின்னால் உள்ள கடலோரப்
பகுதியில் அமைந்துள்ள வீடொன்றை சுற்றி அமைக்கப்பட்ட சுற்றுமதிலை உடைத்து
நாசமாக்கியதுடன் அப்பகுதியில் இருந்த பல தென்னை மரங்களையும் வெட்டி வீழ்த்திய
சம்பவம் தொடர்பாக பிரதேசவாசிகள் பத்து பேரைஇன்று (9) கைது
செய்துள்ளதாக
நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.
கைது
செய்யப்பட்டவர்களில் 6 பெண்களும் 7 ஆண்களும் அடங்குவர்.
கடலோர பாதுகாப்பு
திணைக்களத்திற்கு சொந்தமான கடலோரப் பகுதியில் கடலிலிருந்து 50 மீற்றர் தூரத்தில் வீடொன்றை
சுற்றி அமைக்கப்பட்டிருந்த சுற்றுமதிலும் அப்பகுதியில் இருந்த 10 இற்கும் மேற்பட்ட தென்னை மரங்களுமே நேற்று (8) பிற்பகல் வெட்டி
வீழ்த்தப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டுள்ள
சந்தேக நபர்களை பொலிஸார் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.
No comments:
Post a Comment