Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Tuesday, June 30, 2015

நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் அதிகாரிகளுடன் பிராந்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பு

நீர்கொழும்பு  பிராந்திய பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகளுடன்  நீர்கொழும்பு மற்றும் அயற்பிரதேசங்களில் பணியாற்றும் பிராந்திய ஊடகவியலாளர்களின்  சந்திப்பொன்று இன்று செவ்வாய்க்கிழமை (30) இடம்பெற்றது.
நீர்கொழும்பு  பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் காரியாலஙத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது.
நீர்கொழும்பு  பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுர அபேவிக்ரம, உதவி பொலிஸ் அத்தியட்சகர் அசோக்க விஜேரத்ன மற்றும்   நீர்கொழும்பு  பிராந்திய பொலிஸ் அத்தியட்சகரின் 
அதிகாரத்திற்குட்பட்ட பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த பொறுப்பதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.






நீர்கொழும்பு நகரில் இடம்பெற்று வரும்  பல்வேறு குற்றச் செயல்கள்,   வாகனப் போக்குவரத்துக்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்,  செய்தி சேகரிப்பின் போது ஊடகவியலாளர்களுக்கு பொலிஸ் அதிகாரிகள் ஒத்துழைத்தல் உட்பட நகர மக்களின் நலன்சார் பொது விடயங்களில் இரு தரப்பினரும் இணைந்து மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பாக இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது.




No comments:

Post a Comment