கடலில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற மகனைக் காப்பாற்ற முயன்ற
தந்தையும் மகனும் கடலில் மூழ்கி மரணமான
சம்பவம் நீர்கொழும்பு,
காமாச்சியோடை
பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (28)
இரவு இடம்பெற்றுள்ளது.
நீர்கொழும்பு காமாச்சியோடை
பிரதேசத்தைச் சேர்ந்த் 54 வயதுடைய கணேசமூர்த்தி
(தந்தை), பிரதீப் மூர்த்தி (மகன்)
ஆகியோரே சம்பவத்தில பலியானவர்களாவர்.
மகனின் சடலம் நேற்று
திங்கட்கிழமை கம்மல்துறை
பிரதேசத்திலும், தந்தையின் சடலம் சம்பவம் இடம்பெற்ற அன்றும்
மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
சம்பவத்தில் பலியான மகன் பேலியாகொடை பிரதேசத்தில் உள்ள நிறுவனம் ஒன்றில் வேலை
செய்பவராவார். கடந்த ஞாயிற்றுக்கிழமை
தனது மாத வேதனத்தை பெற்றுக் கொண்டு வீடு திரும்பிய அவர் வழியில் நண்பர் ஒருவரை
சந்தித்துள்ளார் பின்னர் இருவரும் இணைந்து
நள்ளிரவு வரை மதுபானம் அருந்தியுள்ளார்.
பின்னர் நீர்கொழும்பு, காமாச்சியோடை பிரதேசத்தில் உள்ள இன்னொரு நண்பனின் வீட்டுக்கு தற்கொலை செய்து
கொண்ட இளைஞர் தனியாக சென்றுள்ளார். குறித்த வீட்டுக்கு அவர் நள்ளிரவு வேளையில்
யன்னல் வழியாக உட்செல்ல முயன்ற வேளையில் அந்த வீட்டாருடன் பிரச்சினை
ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த இளைஞனின் பெற்றோர் அவரை கடிந்துள்ளனர். பெற்றோரின் பேச்சினை தாங்க முடியாத
இளைஞன் உடனடியாக அருகில் இருந்த காமாச்சியோடை கடலில் பாய்ந்துள்ளார். மகனைக்
காப்பாற்ற தந்தையும் கடலில் குதித்துள்ளார். இந்நிலையில் இருவரும் கடலில் மூழ்கி
காணாமல் போயுள்ளனர்.
தேடுதலை அடுத்து தந்தையின் சடலம் சம்பவ தினம் அன்றும் மகனின் சடலம் அடுத்த
நாள் (திங்கட்கிழமை) அன்றும் மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு
பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment