Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Thursday, October 6, 2011


ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் காலமானார்
      
 கம்ப்யூட்டர் உலகில் பல அரிய சாதனைகளைப் படைத்த ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் (வயது56) மரணமடைந்தார்.

ஸ்டீவ் ஜாப்ஸும் அவருடைய பள்ளி நண்பரான ஸ்டீபன் வோஸ்னிக்கும் இணைந்து ஆப்பிள் கணினியை கலிபோர்னியாவின் புறநகர் பகுதியில் 1976 ஆ‌ம் ஆ‌ண்டு ஏ‌ப்ர‌ல் 1ஆ‌ம் தே‌தி உருவாக்கினர். 


அதன்பின்னர் பெர்சனல் கம்ப்யூட்டர் உலகில் பெரும் புரட்சி ஏற்பட்டது. கணினி மட்டுமல்லாது ஆப்பிள் ஐபாட் உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதன உற்பத்தியில் நிறுவனம் கொடிகட்டிப் பறக்கக் காரணமாக அமைந்தவர்.

புற்றுநோயால்அவதிப்பட்டு வந்த அவர் நியூயார்க் நகரில் மரணமடைந்தார். 
1980ல் இவரால் உருவாக்கப்பட்ட ஆப்பிள் நிறுவனம் இன்றைய நவீன கணினி தொழில்நுட்ப புரட்சியில் முக்கிய இடம் வகித்து வருகிறது. ஸ்டீவ் ஜாப்ஸ் இதை தனது 21வது வயதில் உருவாக்கினார். 1980ல் இவர் உருவாக்கி ஆப்பிள் கம்ப்யூட்டர் மிக வெற்றிகரமாக விளங்கியது. 2011ல் இதன் விற்பனை 4 லட்சத்தைத் தாண்டியது. இது ஒரு உலக சாதனையாகும்.

எங்கும் எடுத்துச் செல்லும் வகையில் கணினி தொழில் நுட்பத்தை மாற்றிய பெருமை இவருக்கே உரியது. சாதாரணமான கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனமாக உருவாகிய ஆப்பிள் நிறுவனத்தில் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஐ பாடு மற்றும் ஐ டியூன்ஸ்இ ஐபோன் உருவாக்கியவர் இவரே. 2003ல் ஐ பாடு உருவாக்கபட்ட பிறகு இசை உலகில் ஒரு மாற்றமே ஏற்பட்டது. சுமார் 20 கோடி பேர் இதில் பதிவு செய்து ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட பாடல்களை பதிவிறக்கம் செய்து ரசித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment