நீர்கொழும்பு நகரில் பிரதான
வீதியொன்றில் இரண்டு வாழை மரங்கள் முளைத்துள்ளன. இதனை வீதியில் பயணிப்போர்
ஆச்சரியத்தடன் பார்வையிட்டபடி செல்கின்றனர்.
நீர்கொழும்பு ரயில் நிலையம் முன்பாக
ராஜபக்ஷ புரோட்வே வீதியின் நடுவில்
தோன்றியுள்ள பாரிய குழிகள் இரண்டிலேயே இந்த
வாழை மரங்கள் நாட்டப்பட்டுள்ளன.
இது தொடர்;பாக அங்கிருந்த வர்த்தகர்கள் மற்றும் ஆட்டோ சாரதிகள் சிலர்
தெரிவிக்கையில், இந்த வீதியில் தோன்றியுள்ள
குழிகள் இரண்டும் நீண்ட காலமாகவே உள்ளன. இதன் காரணமாக வீதியில் பயணிக்கும்
வாகனங்கள் சிரமங்களை எதிர் நோக்குகின்றன.
பல மோட்டார் சைக்கிள்கள்; இந்த குழிகளில் விழுந்து
பழுதடைந்துள்ளன. நீர்கொழும்பு ரயில் நிலையம் , இலங்கை வங்கி , வார இறுதிச் சந்தை மற்றும்
விற்பனை நிலையங்கள் பல இங்கு அமைந்துள்ளதால் இந்த வீதியை பயன்படுத்துவோர்
தொடர்ந்து அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.
இதுதொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபையோ,
மாநகர சபையோ அல்லது
பிரதேச அரசியல்வாதிகளோ கவனம் எடுக்காமை கவலை தருகிறது என் தெரிவித்தனர்.
வெகுவிரைவில் இந்த மரண குழிகள் இரண்டும் புனரமைப்பு செய்யப்பட வேண்டும் என்பதே சகலரதும்
கோரிக்கையாகும்.
No comments:
Post a Comment