Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Wednesday, May 4, 2016

34 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட் வகைகளுடன் நபர் ஒருவர் நீர்கொழும்பில் கைது

 சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கடத்திவரப்பட்ட 34 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட் வகைகளுடன் நபர் ஒருவரை நீர்கொழும்பு பிராந்திய போதை பொருள் ஒழிப்புப் பிரிவு பொலிஸார் கடந்த செவ்வாய்க்கிழமை (3)  கைது செய்துள்ளனர்.
நீர்கொழும்பு பெரியமுல்லை, பாத்திமா வீதியைச் திருமணமான நபரே கைது செய்யப்பட்டவராவார்.
வெலிசறை பிரதேசத்தில் உள்ள பிரபல ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் நிறைவேற்றுப் பணிப்பாளரான சந்தேக நபர் இந்தியாவுக்குச்  சென்று திரும்பும் போது தீர்வையற்ற கடைத் தொகுதிகளில் இருந்து 
வெளிநாட்டு சிகரட் கார்ட்டூன்களை அதிகளவில் கொண்டு வந்துள்ளமை விசாரணைகளின போது தெரிய வந்துள்ளது.


நீண்ட காலமாக இரகசியமான முறையில் சிகரட்டுக்களைவ விற்பனை செய்து வந்த சந்தேக நபர் தொடர்பில் கிடைத்த தகவலை அடுத்து, சிகரட்டுக்களை கொள்வனவு செய்வது போன்று  நடித்து பொலிஸார் சந்தேக நபர் சிகரட்டுக்களை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த இடத்திற்குச் சென்று சிகரட்டுக்களை கைப்பற்றியுள்ளனர்.
நீர்கொழும்பு பிரதேசத்தில் உள்ள ஹோட்டல்கள் பலவற்றுக்கு குறைந்த விலையில் இந்த சிகரட்டுக்களை சந்தேக நபர் விற்பனை செய்துள்ளமை விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.



நீர்கொழும்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுர அபேவிக்ரமவின் ஆலோசணையின் பேரில் இயங்கிய பொலிஸ் குழுவினர் சந்தேக நபரை கைது செய்துள்ளதுடன் சிகரட்டுக்களையும் கைப்பற்றியுள்ளனர.;

No comments:

Post a Comment