போலி காலாவதியான கடவுச்சீட்டுக்கள் இரண்டினை கைவசம்
வைத்துக் கொண்டு வெளிநாடொன்றுக்கு செல்லவதற்கு
முயற்சி செய்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான
விமல் வீரவங்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை
(3) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த வழக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதம்
8 ஆம் திகதிக்கு நீர்கொழும்பு பிரதான நீதவான்
ருச்சிர வெலிவத்த உத்தரவிட்டார்.
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச கடந்த வருடம் அக்டோபர் மாதம் 23 ஆம் திகதி வெளிநாடொன்றுக்கு
செல்ல முற்பட்ட
வேளையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றுப்புலனாய்வு திணைக்கள
அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பின்னர் நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு
பத்து இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப்பிணையிலும் , பத்தாயிரம் ரூபா ரொக்கப்
பிணையிலும் விடுதலை செய்யப்பட்டார்.
முறையற்ற ராஜதந்திர கடவுச்சீட்டைப் பயன்படுத்தி வெளிநாடொன்றுக்கு செல்ல முற்பட்டதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு எதிராக சட்டமா அதிபரினால் குற்றப்பத்திரம் தாக்கல்
செய்யப்பட்டது.
இந்த வழக்கு
மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்போதே வழக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதம்
8 ஆம் திகதி வரை பிரதான நீதவான் ஒத்திவைத்தார்.
No comments:
Post a Comment