வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாசவின்
கருத்திட்டத்தில் உருவான குறைந்த
வருமானமுடைய குடும்பங்களுக்கு இலவசமாக
சிமெந்து பக்கற் வழங்கும் நிகழ்வு மேல்
மாகாண சபை உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் நீர்கொழும்பு அமைப்பாளருமான ரொயிஸ் பெர்னாந்துவின் தலைமையில் நீர்கொழும்பு
மாநகர சபை முன்றலில் இன்று சனிக்கிழமை முற்பகல் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் 120
குடும்பங்களுக்கு தலா 9 சிமெந்து பாக்கற் வீதம் வழங்கப்பட்டது. மேல் மாகாண சபை உறுப்பினர்கள்,
நீர்கொழும்பு
மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் வீடமைப்பு
அதிகாரி சபை அதிகார்கள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
படங்கள்
நிகழ்வில் மேல் மாகாண சபை உறுப்பினர்களான ரொயிஸ்
பெர்னாந்து,
ஸ்ரீநாத்
பெரேரா ஆகியோர் உரையாற்றுவதையும், பயனாளி ஒருவருக்கு மேல் மாகாண சபை உறுப்பினர்
ரொயிஸ் பெர்னாந்து சீமெந்து பக்கற் வழங்குவதையும்
கலந்து கொண்டோரில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.
No comments:
Post a Comment