சட்டவிரோதமாக போலி கச்சேரி நடத்தி வந்த நிதி
அமைச்சின் அபிவிருத்தி உதவி உத்தியோகத்தர்
ஒருவரையும், ஊழியர் சேமலாப நிதியை மோசடியாக பெறமுயன்ற
சம்பவம் தொடர்பாக பெண் உட்பட மேலும் இருவரையும் நீர்கொழும்பு பிரதான நீதவான் ருச்சிர
வெலிவத்த எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (10-5-2016) வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடந்த வெள்ளிக்கிழமை
உத்தரவிட்டார்.
நிதி அமைச்சின்
அபிவிருத்தி உதவி உத்தியோகத்தராக பணியாற்றும் பட்டேபொல, தூனகஹ
பிரதேசத்தைச் சேர்ந்த அமீன் நிலாஸ் குமார
பெரேரா (50 வயது), ஆர்.
சிந்தா, அனுர
ஜயந்த, சாந்தனி
பெர்னாந்து
ஆகியோரே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டவர்களாவர்.
சந்தேக நபர்கள் நால்வரும் நீர்கொழும்பு பிராந்திய
விசேட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் கடந்த வியாழக்கிழமை கைது செயயப்பட்டு, வெள்ளிக்கிழமை
நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோதே சந்தேக நபர்களை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (10-5-2016) வரை
விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
பிரதான சந்தேக நபரான அமீன் நிலாஸ் குமார
பெரேரா சட்டவிரோதமான முறையில் நடமாடும்
கச்சேரி ஒன்றை நடத்தி வந்துள்ளார். சந்தேக நபர் நீர்கொழும்பு, கட்டானை, திவுலப்பிட்டி, நாத்தான்டி, சிலாபம், புத்தளம், வென்னப்புவ
உட்பட பல்வேறு இடங்களையும் சேர்ந்த சமாதன நீதவான்கள், பிரதேச
செயலாளர்கள்,
உதவி
பிதேச செயலாளர்கள்,
மாவட்ட
செயலாளர்கள் உட்பட பல்வேறு பதவிகள் வகிக்கும் அரச உத்தியோகத்தர்களின் பெயர்
மற்றும் பதவிப் பெயர் பொறிக்கப்பட்ட முத்திரைகளையும் (ரப்பர் ஸ்டேம்கள்), கடிதத்
தலைப்புகளையும்,
சான்றிதழ்
பத்திரங்களையும் தயாரித்து சட்டவிரோதமான முறையில்
கிராம சேவையாளரின் சான்றிதழ்கள், மரண சானறிதழ்கள், பிறப்பத்தாட்சி
பத்திரங்கள்,
சிபாரிசு
கடிதங்கள் உட்பட போலி ஆவணங்களை 15 ஆயிரம்
ரூபா முதல் 25 ஆயிரம்
ரூபா வரையான பணத்தைப் பெற்று விற்று
வந்துள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 172 ரப்பர்
முத்திரைகளையும், கிராம சேவையாளர் சான்றிதழ் புத்தகங்கள்
இரண்டினையும் பொலிஸார் கைபற்றியுள்ளனர். கிராம சேவையாளர் சான்றிதழ் புத்தகங்களில்
ஒன்று முழுமையாக முடிவடைந்துள்ளதுடன் மற்றைய புத்தகத்தில் அரைவாசி பக்கங்கள் வழங்கப்பட்டு அவைகளின் அடிக்கட்டைகள்
இருந்துள்ளன.
கைது செய்யப்பட்டுள்ள ஆர். சிந்தா என்ற பெண்,
பணத்
தேவைக்காக உயிரோடிக்கும் தனது கணவனின்
ஊழியர் சேமலாப நிதியை மோசடியான முறையில் பெற்றுக் கொள்வதற்காக பிரதான சந்தேக
நபரின் உதவியை நாடியுள்ளார். பிரதான சந்தேக நபர் அதற்குத் தேவையான மரண அத்தாட்சிப்
பத்திரம் உட்பட ஏனைய ஆவணங்களை போலியாகத் தயாரித்து அந்த பெண்ணிடம் வழங்கியுள்ளார்.
இதற்கு மற்றைய இரு சந்தேக நபர்கள் உடந்தையாக இருந்துள்ளனர்.
ஊழியர்
சேமலாப நிதியை பெற்றுக் கொள்வதற்கு முயற்சி செய்த போது அந்த விண்ணப்பம் தொடர்பாக
குறித்த அரச திணக்களத்திற்கு சந்தேகம்
எழுந்துள்ளது. இதுதொடர்பாக கட்டானை பிரதேச செயலகத்திற்கு அறிவிக்கப்பட்டு, பிரதேச
செயலகத்தினால் ஆர்.சிந்தா என்ற சந்தேக நபரான பெண் வசிக்கும் கிராம சேவகரிடம்
விசாரிக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது. கிராம சேவகர் சந்தேக நபரின் வீட்டிற்கு சென்று
விசாரித்தபோது அந்த பெண்ணின் கணவன் உயிரோடிருப்பது தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார்
விசாரணை செய்தபோதே நடமாடும் போலி கச்சேரி தொடர்பாகவும், பிரதான சந்தேக நபர் தொடர்பாகவும் தெரிய
வந்துள்ளது. இதனை அடுத்து சந்தேக நபர்கள்
கைது செய்யப்பட்டதோடு,
போலி
ஆவணங்களும், ரப்பர்
முத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
பின்னர் சந்தேக நபர்களை மன்றில் ஆஜர் செய்தபோதே
எதிரவரும் பத்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
No comments:
Post a Comment