கட்டானை , கோங்கஸ் சந்தி
பிரதேசத்தில்; வீடொன்றில் இயங்கிவந்த சட்டவிரோத மதுபான தயாரிப்பு
நிலையம் ஒன்றை சுற்றிவளைத்து
சந்தேக நபர்கள் இருவரை கைது செய்ததுடன், 30 இலட்சம் ரூபா பெறுமதியான
மதுபானம், மதுபானம் தயாரிக்கப்
பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பவற்றைக் கைப்பற்றியுள்ளதாக நீர்கொழும்பு
பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் பிரிவைச் சேர்ந்த குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார்
தெரிவித்தனர்.
வென்னப்புவ, தங்கொட்டுவ ஆகிய
பிரதேசங்களைச் சேர்ந்த இருவரே நேற்று
செவ்வாய்க்கிழமை (28) இடம்பெற்ற சுற்றிவளைப்பின்
போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களாவர்.
இந்த சுற்றிவளைப்பின் போது மதுபானங்களை விநியோகிக்கப்
பயன்படுத்தப்பட்ட நவீன ரக வாகனம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் 21 கோடா பரல்களும், 44000 டிராம் கசிப்பு, 1800 டிராம்ஸ் மதுபானம்
என்பவற்றையும், சட்டவிரோத மதுபானம்
தயாரிக்கப் பயனபடுத்தப்பட்ட எரிவாயு சிலின்டர், அடுப்பு, அமோனியா, சீனி என்பவற்றையும் பொலிஸார்
கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட மதுபானம் மற்றும் பொருட்களின் பெறுமதி 30 இலட்சம் ரூபா என பொலிஸார்
தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரனை
மேற்கொண்டுள்ளனர்.

No comments:
Post a Comment