துவிச்சக்கர வண்டியில் ரயில் கடைவையை
கடக்க முயன்ற இளைஞர் ஒருவர் ரயிலில் மோதி பரிதாபகரமாக மரணத்தை தழுவியுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார்
தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (28) காலை நீர்கொழும்பு பெரியமுல்லை ரயில்
கடைவை அருகில் இடம்பெற்றுள்ளது.
பெரியமுல்லை, லாஸரஸ் வீதியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவரே சம்பவத்தில் பலியானவராவார்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
ரயில் கடைவை மூடப்பட்ட நிலையில்
சம்பவத்தில் மரணமடைந்த இளைஞர் துவிச்சக்கர வண்டியை நிறுத்தாது செலுத்தியுள்ளார்.
இதன்போது கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரயிலில் மோதி பரிதாபகரமாக இறந்துள்ளார். விபத்தை அடுத்து இளைஞனின் சடலம் சிதறுண்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

No comments:
Post a Comment