காலஞ்சென்ற சிரேஸ்ட அரசியல்வாதியும முன்னாள் அமைச்சருமான விஜயபாலமென்டிஸின்
இறுதிக்கிரியைகள் இன்று மாலை நீர்கொழும்பு கொட்டுவ நகரசபை மைதானத்தில் நடைபெற்றது.
ஆதற்பு முன்னதாக பிற்பகல் 2
மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது ஜனாதிபதியினால்
அனுப்பிவைக்கப்பட்ட இரங்கல் உரை அமைச்சர் டலஸ்அலகப்பெருவினால் அங்கு
வாசிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அமைச்சர்களான டலஸ்அலகப்பெரும, ராஜித சேனாரத்ன, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய மாநகர சபை உறுப்பிகள் உட்பட பெரும்
எண்ணிக்கையானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் மீரிகமை வீதியில் உள்ள அன்னாரின் இல்லத்திலிருந்து நீர்கொழும்பு
மாநகர சபைக்கு அன்னாரின் பூதவுடல் கொண்டு வரப்பட்டு மாநகர சபை மேயர் மற்றும்
உறுப்பினர்களினால் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து அங்கிருந்து
நீர்கொழும்பு கொட்டுவ நகரசபை மைதானத்தில் இறுதிக்கிரியை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பெரும் எண்ணிக்கையானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment