Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Thursday, September 6, 2012

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 62 பேர் தலா 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை


சட்டவிரோதமான முறையில் படகுகள் மூலமாக அவுஸ்திரேலியாவுக்கு  செல்ல முற்பட்ட போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 62 பேரை நீர்கொழும்பு பிரதான நீதவான் ஏ.எம்.என்.பி அமரசிங்க தலா 5 இலட்சம் ரூபா சரீரப்; பிணையில் விடுதலை செய்ய
இன்று (6) உத்தரவிட்டார்.

அத்துடன் பிணை வழங்கபபட்டவர்களின் கடவுச்சீட்டை நீதிமன்றில்  ஒப்படைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் வடக்கு கிழக்கு பிரதேசங்களை சேர்ந்த தமிழர்களாவர்.

பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டவர்களை சட்டவிரோதமான முறையில் படகுகள் மூலமாக அவுஸ்திரேலியாவுக்கு  அழைத்துச் செல்ல உதவி ஒத்தாசை புரிந்ததாகக் கூறப்படும் 7 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டனர்.
69 பேருக்கு பிணை கோரிக்கை விடுக்கப்பட்ட போதே நீதவான் 62 பேருக்கு சரீரப் பிணை வழங்க உத்தரவிட்டதுடன் ஏனைய ஏழுபேரையும்; தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

மொத்த பெறுமதி மூன்று கோடியே 10 இலட்சம் ரூபாவாகும்

No comments:

Post a Comment