9 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளை வீடொன்றிலிருந்து திருடிய நபரை
எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு
நீர்கொழும்பு மேலதிக நீதவான் டப்ளியூ.கே. துலானி எஸ் வீரதுங்க
உத்தரவிட்டார்.
சந்தேக நபரான
ரத்நாயக்க முதியான்சலாகே சுனில் பதிவு செய்யப்பட்ட (ஐ.ஆர்.சி) குற்றவாளியாவார்.
நீர்கொழும்பு – குடாப்பாடு
பிரதேசத்தில் உள்ள வர்ணகுலசூரிய ரெக்சி நிகால் என்பவருடைய வீட்டிலிருந்து குறித்த
நபர் 9 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளை இரவு வேளையில் திருடியுள்ளதாக குற்றம்
சாட்டப்பட்டுள்ளது.
இந்ந சம்பவம்
கடந்த ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி வழக்கின் முறைப்பாட்டாளர் மற்றும் மனைவி
பிள்ளைகள்; நித்திரையில் இருந்த போது இடம்பெற்றுள்ளது.
மீரிகமையில்
உள்ள சந்தேக நபரின் ஆசை நாயகியின் வீட்டிலிருந்து களவாடப்பட்ட நகைகளின் ஒரு பகுதி
மீட்கப்பட்டுள்ளது. ஏனைய நகைகள் அடகு வைக்கப்பட்டுள்ளமை விசாரணைகளின் போது தெரிய
வந்துள்ளது.
No comments:
Post a Comment