போலி அயிரம் ரூபா நோட்டுக்களை அச்சடித்த
நால்வரை இன்று கைது செய்துள்ளதாக நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் அதிகாரியின் காரியாலயத்தைச்
சேர்ந்த குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி நிசாந்த பெர்னாண்டோ
தெரிவித்தார்.
கிம்புலாபிட்டிய பிரதேசத்தை சேரந்த நால்வரே
கைது செய்யபபட்டுள்ளவர்களாவர். இவர்களுடன் 149 போலி அயிரம் ரூபா நோட்டுக்களையும் போலி
நோட்டுக்களை அச்சடிக்கப் பயன்படுத்தப்பட்ட மடிக்கணனி,ஸ்கேனர், பிரின்டர்
ஆகியவற்றையும் பொலிஸார் கைபற்றியுள்ளனர்.
கிம்புலாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த பட்டாசு
தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நபரிடமிருந்து போலி
நோட்டுக்களை அச்சடிக்க தேவையான
உபகரணங்களை வாங்குவதற்கு ஆரம்பத்தில் இரண்டு லட்சம் ரூபா பணத்தை பெற்று
போலி நோட்டுக்கள் அச்சடிக்கும் சட்ட விரோத செயல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என
பொலிஸார் தெரிவித்தனர்.
போலி அயிரம் ரூபா நோட்டுக்களை பட்டாசு
வியாபாரிகள் மூலம் கிளிநொச்சி பிரதேசத்தில் மாற்ற சநதேக நபர்கள் எடுத்த முயற்சி
தோல்வி அடைந்துள்ளதாகவும், ஏனைய இடங்களில் நோட்டுக்கள் சில மாற்றப்பட்டுள்ளதாகவும்
பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர் செய்ய
பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment