Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Sunday, May 1, 2016

75 மில்லியன் பெறுமதியான எட்டு கிலோகிராம் போதைப் பொருளை கடத்தி வந்த பாகிஸ்தான் பிரஜைக்கு 11 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீர்கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவு

 75 மில்லியன் பெறுமதியான எட்டு கிலோகிராம் 620 கிராம் நிறையுடைய ஹெரொயின் போதைப் பொருளை  பயணப் பொதியில் மறைத்து வைத்து  இலங்கைக்கு கடத்தி வந்த பாகிஸ்தான்  நாட்டவரை எதிர் வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு மேலதிக நீதவான் சாமரி மஹேசிகா தனன்சூரிய கடந்த சனிக்கிழமை (30-4-2016) உத்தரவிட்டார்
  கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில்  கடந்த மாதம் 25 ஆம் திகதி  போதைப் பொருளை இலங்கைக்கு கடத்தி வந்தபோது கைது செய்யப்பட்ட  அக்பான் கான் என்ற 60 வயது  சந்தேக நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டவராவார்.

கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் சந்தேக நபரை கைது செய்து  விமான நிலைய பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரிடம்  ஒப்படைத்த பின்னர், அதிகாரிகள்  நீர்கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதவானிடம்  சந்தேக நபரை ஆஜர் செய்து தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்றனர். சந்தேக நபரிடம் வாக்கு மூலம் பெற்ற பின்னர் கடந்த சனிக்கிழமை பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மேலதிக நீதவானின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தில்  வைத்து சந்தேக நபரை ஆஜர் செய்தபோதே எதிர் வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.



படவிளக்கம்;

சந்தேக நபரான பாகிஸ்தான் பிரஜை கொண்டு வந்த பயணப் பொதி வழக்கின் தடயப் பொருட்களாக நீதிமன்ற பொறுப்பில் இருந்ததன் காரணமாக சந்தேக நபர் தனது உடைகளை  பொதி ஒன்றில் இட்டு சுமந்து கொண்டு சிறைச்சாலை வாகனத்தில் ஏறுவதை படத்தில் காணலாம்.

No comments:

Post a Comment