Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Thursday, June 5, 2014

மண்ணெண்ணெய் மானியம் மற்றும் நிலுவையை வழங்காவிட்டால் 16 ஆம் திகதி ஆர்ப்பாட்டம்: நீர்கொழும்பு மீனவர்கள் எச்சரிக்கை

 கடந்த 12 மாத காலமாக வழங்கப்படாதுள்ள சிறு மீன்பிடித்துறை மீனவர்களுக்கான  மண்ணெண்ணெய் மானியத்தை தொடர்ந்து வழங்குமாறும், இதுவரை வழங்கப்படாதுள்ள நிலுவைத் தொகையை வழங்குமாறும், இல்லையேல்எதிர்வரும் 16 ஆம் திகதி  திங்கட்கிழமை நீர்கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தப்படும் எனவும் நீர்கொழும்பு மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள்  எச்சரிக்கை செய்தனர்.

நீர்கொழும்பு குடாப்பாடு ஐக்கிய மீனவர் சங்க  காரியாலயத்தில் நேற்று  மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மீனவர் சங்கங்களின் ஒன்றியத்தைச் சேர்நத பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்தனர்.
நீர்கொழும்பு கடற்கரைத் தெரு, வென்னப்புவ, பலகத்துறை, போருதொட்ட., பிட்டிபனை உட்பட பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த மீனவ சங்க பிரதிநிதிகள் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்தனர்.
பிட்டிப்பனை மீனவர் பிரதிநிதி லெனின் பிரான்ஸிஸ் அங்கு கருத்து தெரிவிக்கையில்,
அரசாங்கம் மீனவர்களை தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. மண்ணெண்ணெய் மானியத்தை வழங்குவதாகக் கூறி கடந்த 12 மாத காலமாக எங ;களை ஏமாற்றியுள்ளனர். ஜனாதிபதி வாக்குறுதி அளித்தபடி  மாதத்திற்கு 9375 ரூபா மானியம் கடந்த 12 மாத காலமாக வழங்கப்படாமல் உள்ளது. அந்த வகையில் மீனவர் ஒருவருக்கு ஒரு இலட்சத்து 12ஆயிரத்து 500 ரூபா அரசாங்கத்தால் வழங்கப்பட வேண்டியுள்ளது. நாங்கள் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் ஒவ்வொரு தடைவையும் மீன்படித்துறை அமைச்சரும் அவரது பிரதி  அமைச்சரும்  பொய் வாக்குறுதிகளை மீனவர்களுக்கு வழங்குகின்றனர்.





தற்போது மண்ணெண்ணெய் மானியத்திற்கு பதிலாக மாற்றீடாக மீன்பிடி உபகரனங்களை மீனவர்களுக்கு பலாத்காரமாக வழங்க முயற்சிக்கின்றனர். அதற்கான படிவத்தை  தற்போது வழங்கியுள்ளனர். நாங்கள் கேட்பது மண்ணெண்ணெய் மானியத்தை மாத்திரமே  அதற்கு மாற்றத் தீர்வை அல்ல.
நாங்கள் நடத்திய போராட்டதி;தின் பின்னர் உயிர் பலி எடுக்கப்பட்டதன் பின்னரே மானியம் வழங்குவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. மீன்பிடித்துறை பிரதி அமைச்சர் நீர்கொழும்பைச் சேர்ந்தவராக இருந்த போதிலும் மீனவர்கள் தொடர்ந்தும்  ஏமாற்றப்படுகின்றனர்.
விரைவில் மானியம் வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர் வரும்  16 ஆம் திகதி  (16-6-2014) நீர்கொழும்பில் மாபெரும் ஆரப்பாட்டம் நடத்தப்படும். இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அரசாங்கமே பொறுப்பு கூறவேண்டும் என்றார்.

அங்கு உரையாற்றிய ஏனைய மீனவ சங்க உறுப்பினர்கள், விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர மானியம், வெள்ள நிவாரணம், போன்ற  நிவாரணங்கள்  மீனவர்களுக்கு கிடைப்பதில்லை எனவும் எரிபொருள் வாங்க பணம் இல்லாமை காரணமாக மீனவர்கள் பலர் கடலுக்கு செல்வதில்லை எனவும், மீனவர்களுக்கான காப்புறுதி திட்டத்தில் கடலில் படகு முற்றாக மூழ்கினாலேயே காப்புறுதித் தொகை வழங்கப்படும் என்பதும் சேதங்களுக்கு நஸ்டயீடு; வழங்;கப்படாது என்பதும் விசனத்திற்குரியது எனவும் அங்கு உரையாற்றிய மீனவ சங்க பிரதிநிதிகளால் சுட்டிக்காட்டப்பட்டது.



No comments:

Post a Comment