டிரான்ஸ் பேரன்ஸி இன்டர்நெசனல் அமைப்பு
நீர்கொழும்பு கோல்ட்; சேன்ட் ஹோட்டலில் நடத்திய புலனாய்வு
தொடர்பான மூன்று நாள் ஊடக செயலமர்வு ஹோட்டலின் முன்பாக திடீரென்று கூடிய
ஆர்ப்பாட்டக்காரர்களினால் இடை நிpறுத்த வேண்டி ஏற்பட்டது.
இந்த ஊடக செயலமர்வு நேற்று வெள்ளிக்கிழமை
ஆரம்பமாகி இன்று
இரண்டாவது தினமாக நடைபற்றுக் கொண்டிருந்தது. வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல பிரதேசங்களையும் சேர்ந்த தமிழ் சிங்கள
ஊடகவியலாளர்கள் இதில் பங்குபற்றினர.;
இந்த ஆர்ப்பாட்டம் இன்று மாலை
இடம்பெற்றது. தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்பும் அமைப்பு என்ற பெயர் கொண்ட அமைப்பினர்
இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.ஹோட்டலின் முன்பாக ஆர்ப்பாட்டத்தை நடத்தியவர்கள்
பின்னர் ஹோட்டலின் வாயிலுக்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக அந்த ஹோட்டலில் நடைபெற்றுக்
கொண்டிருந்த திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.
பெலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை ஹோட்டலின்
உள்ளே செல்லவிடாது தடுத்து நிறுத்தினர்
.;
No comments:
Post a Comment