முச்சக்கர வண்டியொன்றில் வந்து
வீடொன்றில் திருட முயன்ற போது
வீட்டிலிருந்த பெண்னொருவர் கூக்குரல் இட்டதை அடுத்து திருட வந்த நாலவரில் ஒருவர் பிரதேசவாசிகளால் மடக்கிப்
பிடிக்கப்பட்துடன் மூவர் தப்பியோடியுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணியளவில் நீர்கொழும்பு – பழைய சிலாபம் வீதியில்
அமைந்துள்ள வீடொன்றில் இடம்பெற்றது
இது தொடர்பாக குறித்த வீட்டிலிருந்த பெண்மனி தெரிவிக்கையில்,
எமது வீட்டில் மூன்றாவது தடைவையாக திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 2010 ஆம் ஆண்டு முதல் திருட்டுச் சம்பவம் இடம்பெற்ற போது வீட்டின் கூரையை பிரித்து
உள்ளே நுழைந்த திருடர்கள் 13 பவுண் நகையை திருடினர்.
இரண்டாவது சம்பவம் கடந்த வருடம்
இடம்பெற்றது. இதன் போது வீட்டின் முன் கதவை உடைத்து உள்ள நுழைந்த திருடர்கள்
வீட்டிலிருந்த லெப்டொப், கமரா, செல்லிடத் தொலைபேசி, 27 ஆயிரம் ரூபா பணம் ஆகியவற்றை திருடிச்சென்றனர். இந்த சம்பவம்
தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில், இன்று மூன்றாவது திருட்டுச் சம்பவம் இடம்பெற்றது. இன்று
முற்பகல் வீட்டிலுள்ளவர்கள் தேவையொன்றிற்காக வெளியே சென்ற நிலையில் நான் மாத்திரம்
வீட்டிலிருந்தேன். முற்பகல் 11 மணியளவில் வீட்டின் பின்பக்கமாக சப்தம் கேட்கவே,
நான் வீட்டின்
உட்பக்கமாக சென்று பார்த்தேன். அப்போது வீட்டின் மதில் மேல் ஏறி குதித்து வந்த
ஒருவர் வீட்டிற்கு பின்பக்கமாக
வைக்கப்பட்டிருந்த சமையலறை பாத்திரங்களை திருடி மதிலுக்கு வெளியே இருந்த
இருவருக்கு கொடுப்பதைக் கண்டேன். .அவர்கள் அதனை
மதிலுக்கு அருகில் நிறுத்தி வைத்திருந்த முச்சக்கர வண்டியில் ஏற்றிக்
கொண்டிருந்தனர். உடனடியாக நான் வீட்டின் உட்பக்கமாக வெளியில் வந்து திருடன்,திருடன் என சப்தமிட்டேன் இதனை அடுத்து அங்கிருந்தவர்கள் ஓடிவந்த போது மூன்று
பேர் தப்பியோடி விட்டனர். முச்சக்கர வண்டியை ஓட்டி வந்தவர் மாத்திரம் அகப்பட்டுக்
கொண்டார் என்று தெரிவித்தார்.
இதனை அடுத்து சம்பவம் தொடர்பாக அந்த
வழியால் வந்த போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, கடோல்கலே பிரதேசத்தைச் சேர்ந்த
திருடர்களில் ஒருவரான முச்சக்கரவண்டி சாரதி கைது செய்யப்படார்.
இச்சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸார்
விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நீர்கொழும்பில் அண்மைக்காலமாக கொள்ளைச் சம்பவங்களும் திருட்டுச் சம்பவங்களும்
அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment