நீர்கொழும்பில் அமைந்துள்ள நகை கடை மற்றும் வெளிநாட்டு நாணய மாற்று நிலையமொன்றில்; கடந்த பெப்ரவரி மாதம் ஆயுத முனையில் பணம்
கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜர்
செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரான ரொயிஸ் விஜித்த பெர்னாந்து சார்பாக அவரது
சட்டத்தரணிகளால் விடுக்கப்பட்ட பிணை கோரிக்கையை நிராகரித்த நீர்கொழும்பு மேலதிக
நீதவான் ஜி.எம். திலக்கரட்ன பண்டார சந்தேக நபரை எதிர்வரும் ஜுன் மாதம் 13 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கடந்த
வெள்ளிக்கிழமை(30) உத்தரவிட்டார்.
ஆயுதங்கள் தொடர்பான சட்டத்தின் கீழ் சந்தேக நபருக்கு எதிராக
குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதால் நீதவான் நீதிமன்றத்திற்கு இக்கொள்ளைச்
சம்பவத்தின் முதலாம் சந்கே நபருக்கு பிணை வழங்க அதிகாரம் கிடையாதென தெரிவித்த
நீதவான் பிணை வழங்க மறுப்பு தெரிவித்தார்.
அத்துடன் மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள வழக்கின்
முதலாம் சந்கே நபரான ரொயிஸ் விஜித்த பெர்னாந்துவுக்கு மாகாண சபை அமர்வுகளில்
சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் பங்குபற்ற நீதவான் அனுமதி வழங்கினார்.
அத்துடன் இந்த வழக்குத் தொடர்பாக பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட
சந்தேக நபரின் வாகனத்தை 50 ஆயிரம் டூபா
பிணையில் விடுவிக்கவும் நீதவான் உத்தரவிட்டார்.
கடந்த பெப்ரவரி மாதம் 17 ஆம்
திகதி நீர்கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள நகை மற்றும் வெளிநாட்டுநாட்டு நாணயமாற்று முகவர்
நிலையத்தில் ஆயுத முனையில் முகத்தை முழுமையாக மறைக்கும் ஹெல்மட் அணிந்து வந்த
துப்பாக்கிதாரிகள் நால்வரால் பல கோடி ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
அந்த கொளளைச் சம்பவம் தொடர்பாக பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி சந்தேகத்தின் பேரில் ரொயிஸ் விஜித்த பெர்னாந்து
கைது செய்யப்பட்டார். அதற்கு முன்னதாக
சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேர் சந்தேகத்தின் பேரில் செய்யப்பட்டனர்.
ரொயிஸ் விஜித்த பெர்னாந்து மூன்று சந்தேக நபர்கள் பயங்கரவாத
தடுப்புச் சட்டத்தின் கீழ் மூன்று மாத காலம் தடுப்புக் காவல் உத்தரவில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில், கடந்த மே மாதம் 21
மஜிஸ்ட்ரேட் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட
போது, நீர்கொழும்பு பிரதான மஜிஸ்ட்ரேட் ஏ.எம்.என்.பி. அமரசிங்க
சந்தேக நபர்களை மே 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு
உத்தரவிடப்பட்டார். ஏனைய சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் 30 ஆம் திகதி அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தமாறும் நீதவான்
உத்தரவிட்டார்.
இதனை அடுத்து
இன்றைய(30) தினம் ரொயிஸ் விஜித்த பெர்னாந்து நீரகொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்
செய்யப்பட்ட பேதே, அவரை ஜுன்
மாதம் 13 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு
நீதவான் உத்தரவிட்டார்.
ரொயிஸ் விஜித்த பெர்னாந்து ஐக்கிய தேசியக் கட்சியின்
சாரபில்; மேல் மாகாண
சபையில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு
29 ஆயிரத்து 291 விருப்பு
வாக்குகளைப் பெற்று கம்பஹா மாவட்டத்தில் ஆறாவது இடத்தைப் பெற்று மாகாண சபை
ஊறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளவராவார். இவர் நீர்கொழும்பு தேர்தல் தொகுதியின்
ஐக்கிய தேசியக் கட்சி;
பிரதான
அமைப்பாளரும், நீர்கொழும்பு மாநகர சபையின் முன்னாள் எதிர் கட்சித்
தலைவருமாவார்.
No comments:
Post a Comment