Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Wednesday, May 16, 2012

உயர்தர வகுப்பில் கற்பதற்கு தேசிய பாடசாலைக்கு மாறுவது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு


 கல்வி பொது தராதர உயர்தரத்திற்கு தெரிவான மாணவர் ஒருவர் மற்றுமொரு தேசிய பாடசாலைக்கு மாறுவது தொடர்பில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையை தாம் வன்மையாக கண்டிப்பதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.


கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கட்சியின் பாராளுன்ற உறுப்பினர் பீ ஹெரிஸன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்த சுற்றறிக்கை காரணமாக மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய பாடசாலைகளுக்கு மாணவர்கள் மாறுவது தொடர்பில் அரசாங்கத்தினால் சில தினங்களுக்கு முன்னர் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

இதன்படி குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் மாணவருக்கு உரிய வசதிகள் இருப்பின் அந்தமாணவன் வேறு பாடசாலைக்கு செல்வதற்கு முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்த புதிய சுற்று நிருபத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் பெற்றோர்கள், மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை, இவ்விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள், பெற்றோர்கள் கல்வி அமைச்சின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment