Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Sunday, May 20, 2012

இன்னொருவருடைய வங்கி வீஸா அட்டையை பயன்படுத்தி மோசடியாக பணத்தை பெற்ற மூவருக்கு விளக்கமறியல்


வாடிக்கையாளர் ஒருவரால் வங்கியில் தவறவிடப்பட்ட வீஸா அட்டையை பயன்படுத்திப பல இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபர்கள் மூவரை நீர்கொழும்பு பிரதான நீதவான் ஏ. எம்.என். பி. அமரசிங்க எதிரவரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று (19)  உத்தரவிட்டார்.


சிலாபத்தை சேர்ந்த அன்ஸி மதுசாந்தி , அக்கரபணஹ பிரதேசத்தை சேரந்த இந்திக நிர்மல குணவர்தன , மஹவௌ பிரதேசத்தைச் சேர்ந்த பாத்திமா பஸீலா ஆகியோரே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டவர்களாவர்.

சந்தேக நபர்கள் மூவரும் நீர்கொழும்பு - போலவலான பிரதேசத்தை சேர்ந்த சோமரத்ன பண்டா என்பரின் வங்கி அட்டையை பயன்படுத்தி பல இலட்சம் ருபா பணத்தை மோசடியாகப் பெற்றுள்ளனர்.
வழக்கின் முறைப்பாட்டாளர் கடந்த 9 ஆம் திகதி நீர்கொழும்பில் உள்ள தனியார் வங்கியொன்றின் தன்னியக்க இயந்திரத்தில் பணத்தை பெற்றுக் கொண்டு செல்லும் போது, அவரது வங்கி அட்டையையும், வங்கி அட்டையின் இரகசிய குறியீடு எழுதப்பட்ட காகிதத்தையும் தவறவிட்டுள்ளார்.

இதனை சந்தேக நபர்களில் இருவர் கண்டுள்ளதோடு வங்கி வீஸா அட்டையை பயன்படுத்தி 80 ஆயிரம் ரூபா பணத்தையும் முதலில் பெற்றள்ளனர். பின்னர் மூன்றாவது சந்தேக நபரான மஹவௌ பிரதேசத்தை சேர்நத பெண்ணுடன் இணைந்து 3 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா பணத்தை பெற்று மூவருமாக பணத்தை பகிர்ந்துள்ளனர்.
வழக்கின் முறைப்பாட்டாளர் மூன்று தினங்கள் கடந்து தனது வங்கி அட்டை காணாமல் போனதை அறிந்து கொண்டதன் பின்னர், நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்து, வங்கியின் இரகசிய கமராவை பரிசீத்த பொலிஸார் நகரில் உள்ள கடைகளில் விசாரணை மேற் கொண்டுள்ளனர்.

இதன் போது சந்தேக நபர்கள் தொடர்பான தகவல் தெரிய வந்துள்ளது. அதனை தொடர்ந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோ, சந்தேக நபர்களால் கொள்வனவு செய்யப்பட்ட லெப்டொப், பிளென்டர், சோபாசெட் என்பவற்றையும் பணத்தையும் மீட்டுள்ளனர்.    

No comments:

Post a Comment