Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Saturday, May 26, 2012

போலி கடவுச் சீட்டை பயன்படுத்தி இத்தாலி செல்ல முற்பட்ட நபருக்கு பிணை


போலி விஸா பதிக்கப்பட்ட மற்றும் போலி முத்திரை பதிக்கப்பட்ட போலி கடவுச் சீட்டை பயன்படுத்தி இத்தாலி செல்ல முற்பட்ட போது அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நபரை நீர்கொழும்பு
பிரதான நீதவான் ஏ.எம்.என்.பி.அமரசிங்க  நேற்று வெள்ளிக் கிழமை 15 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் இரண்டு இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

வுத்தளை பள்ளியவத்த பிரதேசத்தை சேர்ந்த குருவிட்ட ஆராச்சிகே டொன் சானுக ஜோசெப் என்பவரே பிணையில் விடுதலை செய்ய அனுமதிக்கப்பட்டவராவார்.

சந்தேக நபர் வசந்த என்ற நபருக்கு இத்தாலி சென்ற பிறகு 15 இலட்சம் ரூபா தருவதாக ஒத்துக் கொண்டதன் அடிப்படையில் போலி விஸா பதிக்கப்பட்ட போலி கடவுச் சீட்டில் வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்ட போதே  இத்தாலியில் வைத்து அது தொடர்பாக கண்டுபிடிக்கப்பட்டு 7-5-2012 அன்று இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார் என விசாரணைகளின் போது தெரிவிக்கப்பட்டது

No comments:

Post a Comment