மாணவிகளை பாலியல்
துஷ்பிரயோகம் புரிந்த குற்றச்சாட்டில் திவுலபிட்டிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட
பாடசாலை அதிபர் ஒருவர் இன்று மாலை நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் சட்ட
வைத்திய அதிகாரியின் பிரிவிற்கு மருத்துவ
பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்டார்.
மினுவாங்கொட கல்வி
வலயத்தைச் சேரந்த கெஹெல்
எல்ல பௌத்த கனிஸ்ட வித்தியாலயத்தில் பதில் அதிபராக பணியாற்றிய நபர் ஒருவரே
மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் புரிந்த குற்றச்சாட்டில் கைது
செயப்பட்டுள்ளவராவார்.
சநதேக நபர் தனது
பாடசாலையில் கல்வி கற்கும் எட்டு முதல் 13 வயது வரையான மாணவிகளை பாடசாலை முடிவடைந்த பிறகு
பல்வேறு கல்வி நடவடிக்கைகளை குறிப்பிட்டு பாடசாலையில் வைத்திருந்து மாணவிகளை
பாலியல் துஷ்பிரயோகம் புரிந்து வந்துள்ளமை தொடர்பாக கிடைக்கப் பெற்ற சாட்சிகளின்
அடிப்படையில், திவுலபிட்டிய பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினரால்
கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரினால்
பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவிகள் ஒன்பது பேர் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின்
சட்ட வைத்திய அதிகாரியின் பிரிவிற்கு பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்டனர்.
மாணவிகளின்
பெற்றோர்களும் வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்தனர்.
இதேவேளை, சந்தேக நபரை
மினுவாங்கொட நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment