விபசாரத்தில் ஈடுபட்ட நான்கு பெண்களை
நீர்கொழும்பு உல்லாசப்பயணத்துறை பொலிஸார் இன்று கைது செய்தனர்.
நீர்கொழும்பு ஏத்துக்கால பிரதேசத்தில்
மசாஜ் கிளப் என்ற போர்வையில் இயங்கி வந்த விபசார நிலையத்தில்
பொலிஸார் திடீர்
சோதனை நடத்திய போதே நான்கு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மினவாங்கொட, பன்னல, அலபடகம ஆகிய
பிரதேசங்களை சேரந்தவர்களென பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் அந்த
நிலையத்தை நடத்திவரும் பெண் முகாமையாளர் எனவும் அவரும் விபசாரத்தில் ஈடுபடுபவர் எனவும்
பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்
செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment