நீர்கொழும்பில் அமைந்துள்ள நகை கடை மற்றும்
வெளிநாட்டு நாணய மாற்று நிலையமொன்றில்; இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்
வைக்கப்பட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட மேல் மாகாண சபை உறுப்பினர்
ரொயிஸ் விஜித்த பெர்னாந்துவை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை (25-7-2014) விளக்கமறியலில் வைககுமாறு நீர்கொழும்பு பிரதான நீதவான் பூர்ணிமா பரணகமகே இன்று
வெள்ளிக்கிழமை (11) உத்தரவிட்டார்.
நீர்கொழும்பு சிறைச்சாலை வைத்தியர்
மன்றில் ஆஜராகி ரொயிஸ் விஜித்த பெர்னாந்து காய்ச்சலினால்
பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
காய்ச்சலினால் பதிக்கப்பட்டுள்ள ரொயிஸ் விஜித்த பெர்னாந்துவுக்கு உரிய
சிக்கிச்சை வழங்குவதற்காக சிறைச்சாலை வைத்தியர் ஊடாக வைத்தியசாலையில்
அனுமதிக்குமாறு சிறைச்சாலை அதிகாரிக்கு நீதவான் உத்தரவிட்டார்.
கடந்த பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி நீர்கொழும்பு
பிரதான வீதியில் அமைந்துள்ள நகை மற்றும்
வெளிநாட்டுநாட்டு நாணயமாற்று முகவர் நிலையத்தில் ஆயுத முனையில் முகத்தை
முழுமையாக மறைக்கும் ஹெல்மட் அணிந்து வந்த துப்பாக்கிதாரிகள் நால்வரால்; ஒன்றரை கோடி கோடி ரூபாவுக்கு
மேற்பட்ட பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
அந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி சந்தேகத்தின்
பேரில் ரொயிஸ் விஜித்த பெர்னாந்து கைது செய்யப்பட்டார். அதற்கு முன்னதாக சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேர்
சந்தேகத்தின் பேரில் செய்யப்பட்டனர்.
அதில் ஒருவர் பொலிஸ் பிணையல் விடுதலை செய்யப்பட்டார்.
ரொயிஸ் விஜித்த பெர்னாந்து ஐக்கிய
தேசியக் கட்சியின் சார்பில்; மேல் மாகாண சபையில் கம்பஹா மாவட்டத்தில்
போட்டியிட்டு 29 ஆயிரத்து 291 விருப்பு வாக்குகளைப் பெற்று
கம்பஹா மாவட்டத்தில் ஆறாவது இடத்தைப் பெற்று மாகாண சபை ஊறுப்பினராக தெரிவு
செய்யப்பட்டுள்ளவராவார். இவர் நீர்கொழும்பு தேர்தல் தொகுதியின் ஐக்கிய தேசியக்
கட்சி; பிரதான அமைப்பாளரும், நீர்கொழும்பு மாநகர சபையின்
முன்னாள் எதிர் கட்சித் தலைவருமாவார்.
No comments:
Post a Comment