நீர்கொழும்பு நகரில் தற்காலிகமாக தங்கியள்ள பாகிஸ்தான் பிரஜைகளுக்கு போலியோ
தடுப்பு மருந்து வழங்கும் வைத்திய முகாம் இன்று நீர்கொழும்பு தளுபத்தை, கடற்கரைத் தெரு, குடாபாடு ஆகிய பிரதேசங்களில் உள்ள
தாய் . சேய் நிலயங்களில் இடம்;பெற்றது
சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப் பிரிவின் பணிப்பின் பேரில் நீர்கொழும்பு
மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரியின் காரியாலயம் இதனை ஏற்பாடு
செய்திருந்தது.
அகதிகளுக்காக ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் ஊடாக இலங்கையில் தங்கியிருந்தபடி
தஞ்சம் கோரியுள்ள பாகிஸ்தானைச் சேர்ந்த முஸ்லிம்கள், கிறிஸ்ததவ.- கத்தோலிக்கர்கள் 1000 இற்கும் மேற்பட்டோர்
நீர்கொழும்பு நகரின் பல்வேறு பிரதேசங்களிலும் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment