முச்சக்கர வண்டியில் வந்த நால்வரைக் கொண்ட குழுவொன்றினால் இளைஞர் ஒருவர் வெட்டியும் குத்தியும் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு 6 மணியளவில் நீர்கொழும்பு கதிரானை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
நீர்கொழும்பு, எட்டம்ப கஹவத்தை , தெமங்சந்தி பிரதேசத்தைச் சேர்ந்த புரூணா என்று அழைக்கப்படும் கிரிஸாந்த திலும் சம்பத் பெர்னாந்து (27 வயது) என்ற திருமணமாகாத நபரே படுகொலை செய்யப்பட்டவராவார்.
இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது.
கொலை செய்யப்பட்டவர் உடற் கட்டழகு (டீழனல டீரடைனiபெ) விளையாட்டு வீரராவார். இவர் இதற்கு முன்னர் தனது சித்தப்பாவை கொலை செய்த குற்றச்சாட்டில் சிறை தண்டனை விதிக்கப்பட்டதுடன் பல்வேறு குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டவராவார்.
நேற்;று புதன்கிழமை மாலை 6 மணியளவில் தனது வீட்டிலிருந்து கதிரானைக்கு செல்வதாக வீட்டாரிடம் கூறிச் வெளியில் சென்றவiர் முச்சக்கர வண்யில் வந்த நான்கு நபர்கள் இடைவழியில் மறிதத்து முகத்தில் மிளகாய்த் தூளை வீசிவிட்டு கூரிய ஆயுதங்களால் வெட்டியும் குத்தியும் கொலை செய்துள்ளனர்.
நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளின்; பேர்து படு கொலை செய்யப்பட்டவர் கொலை சந்தேக நபர்களான நால்வரில் ஒருவரை சில வருடங்களுக்கு முன்னர் தாக்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட இளைஞர் இன்னும் ஒரு மாத காலத்தில் தனது அண்ணன் மற்றும் அக்கா தொழில் செய்யம் வெளிநாட்டுக்கு (டோஹா கட்டார்) செல்லவிருந்த நிலையலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இக்கொலையை மேற்கொண்ட சந்தேக நபர்களை பொலிஸார் இனங் கண்டுள்ளனர். இதுவரை ஒருவரும் கைது செய்யப்படவில்லை.
நீர்கொழும்பு பொலிஸார் இந்த படுகொலைச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment