Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Wednesday, July 9, 2014

நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு:: கட்டில் இன்றி நோயாளிகள்; நிலத்திலும் கதிரையிலும்

நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதன் காரணமாக கட்டில் இன்றி நோயாளிகள்; கதிரைகளிலும் நிலத்திலும் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வைத்தியசாலையின் மூன்றாம். நான்காம் வார்ட் மற்றும்  சிறுவர் வார்ட்  உட்பட பெரும்பாலான வார்ட்களில் இந்நிலை ஏற்பட்டுள்ளதன் காரணமாக நோயாளிகள் பெரும் அசௌகரியங்களை எதிர் நோக்கியுள்ளனர். நான்காம் வார்ட்டில்  அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் சிலர் தமக்கு
ஏற்றப்படடுள்ள  சேலைன் போத்தலை கையில் வைத்துக் கொண்டு கதிரையிலும் வாங்குகளிலும்  அமர்ந்து இருப்பதை காணக் கூடியதாக இருந்தது. இரவு வேளையிலும் அவர்கள் நிலத்தில்; விரிப்பை விரித்து தூங்குகின்றனர்.



இது தொடர்பாக வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்தியர் சம்பா அளுத்வீரவிடம்  வினவிய போது, தற்போது வைத்தியசாலையின் சகல வார்ட்களும் நோயாளிகளால் நிரம்பியுள்ளன. ஒரு நாளைக்கு மேல் காய்ச்சல் காணப்பட்டால் வைத்தியசாலைக்கு வந்து சிகிச்சை பெறுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதன் காரணமாக நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு வார்டில் 30 கட்டில்கள் இருந்த போதிலும் நோயாளிகள் எண்ணிக்கை  மும்மடங்காகியுள்ளது.
இன்றைய தினம் (9) டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று உறுதி செய்யப்பட்ட 68 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் வைத்தியசாலையின் விசேட டெங்கு வார்ட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வார்ட்;டில் 17 கட்டில்கள் உள்ளன.

சிறுவர் வாரட், மூன்றாம், நான்காம், எட்டாம் வார்ட்டுக்களில் அதிக எண்ணிக்கையில் நோயாளிகள் அனுமதிpக்கப்பட்டுள்ளனர் என்றார்.
இதேவேளை மூன்றாம் நான்காம் வாரட்களில்  நோயாளிகளை பார்வையிடுவதற்கு பாஸ் முறை அமுல்படுத்தப்பட்டுள்ளதால் நோயாளிகளை பார்வையிட வருவோர் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது.


No comments:

Post a Comment