சீதுவை. கட்டுநாயக்க பிதேசத்தில் உள்ள வீடொன்றில் புகுந்த ஆயுததாரிகள்
வீட்டிலிருந்தோரை கட்டி வைத்து விட்டு துப்பாக்கி முனையில் மூன்று இலட்சத்து 22 ஆயிரம் ரூபா பெறுமதியான பணம் மற்றும் நகைகள் கொள்ளையிட்டு தப்பிச்
சென்றுள்ளனர்
இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 9.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
சம்பவம் இடம்பெற்ற வீட்டின் உரிமையாளர் கணக்காளர் ஆவார். அவரது
மனைவி
ஆசிரியையாவார். சம்பவம் இடம்பெற்ற போது இவர்கள் இருவரும் தமது மகளுடன் வீட்டில்
இருந்துள்ளனர்.
திடீரென்று வீட்டிற்குள் நுழைந்த இனந்தெரியாத நபர்கள் இருவர் ரிவோல்வரை
காண்பித்து அச்சுறுத்தி வீட்டில் இருந்தோரின் கை,
கால் மற்றும் வாயை
கட்டியுள்ளனர். பின்னர் அந்த ஆயுததாரிகள் வீட்டிலிருந்த மூன்று இலட்சத்து 22 ஆயிரம் ரூபா பெறுமதியான நகை மற்றும் பணம் என்பவற்றை கொள்ளையடித்து தாங்கள்
வந்த வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த கொள்ளைச் சம்பவத்தின் போது
கொள்ளையர்களில் இருவர் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். மேலும் இருவர் தாங்கள் வந்த
வாகனத்தில் வெளியே இருந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
சீதுவை பொலிஸார் சம்பவம் தொடர்பாக
விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்
No comments:
Post a Comment