முச்சக்கர வண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்தி அந்த வண்டியில் அனாச்சாரமான
முறையில் நடந்து கொண்ட குற்றச்சாட்டின்
பேரில் பாடசாலை மாணவர்கள் அறுவர் உட்பட முச்சக்கர வண்டி சாரதியையும் நேற்று கைது
செய்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.
நீரகொழும்பு கலவிக் கோட்டத்தில்
அமைந்துள்ள இரண்டு பாடசாலைகளைச் சேர்ந்த
ஆண் மாணவர்கள் மூவரும் மாணவிகள்
மூவருமே இன்று ஞாயிற்றுக்கிழமை காலை
நீர்கொழும்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர்களாவர். இந்த மாணவர்களின் வயது 15 முதல் 16 வயதுக்கு இடைப்பட்டதாகும்.
காதலர்களான இந்த மாணவர்கள் குறித்த முச்சக்கர வண்டியை ஒரு மணித்தியாலத்திற்கு 300 ரூபாவுக்கு வாடகைக்கு அமர்த்தி
கடோல்கலே பிரதேசத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள காட்டுப்
பகுதியில் முச்சக்கர வணடி;யில் வைத்து ஜோடியாக இருந்து
காதல் லீலையில் ஈடுபட்டுள்ள போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மாணவர்கள் அறநெறி பாடசாலைக்கு செல்வதாக வீட்டாரிடம் தெரிவித்து
விட்டு வந்து காதல் லீலையில்
ஈடுபட்டுள்ளமை விசாரணைகளிக் போது தெரிய வந்துள்ளது.
சம்பவத்தை அடுத்து மாணவர்களையும் முச்சக்கர வண்டி சாரதியைம் பொலிஸார் கைது
செய்ததோடு. முச்சக்கர வண்டியையும்
கைப்பற்றியுள்ளனர்.
No comments:
Post a Comment